• Tue. Jan 13th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

நடிகர், நடிகைகளின் தலையை பதம் பார்த்த சலூன் கடைகாரர் – வைரலாகும் வீடியோ

தமிழ் சினிமா நடிகர், நடிகைகளின் தலையை மொட்டை அடித்தது போல் எடிட் செய்து சலூன் கடைக்காரர் ஒருவர் தனது கடையின் விளம்பரத்துக்காக வைத்துள்ள வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.


சினிமா நடிகர்கள் மூலம் ஒரு பொருளை பிரபலப்படுத்தினால் அதற்கு மக்கள் மத்தியில் வரவேற்பு இருக்கும் என்பதால், பெரும்பாலும் கடை வீதிகளில் சினிமா நடிகர், நடிகைகளின் புகைப்படங்களை பயன்படுத்தி விளம்பரப்படுத்துவர். துணிக்கடை, சலூன் கடை, நகைக்கடை, பட்டாசுக்கடை உள்ளிட்டவற்றில் அஜித், விஜய், ரஜினி, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், திரிஷா என ஏராளமான நடிகர், நடிகைகளின் புகைப்படங்கள் இன்றளவும் விளம்பரத்துக்காக பயன்படுத்தப்பட்டு வருகின்றன.


ஆனால் தற்போது வைரலாகி வரும் வீடியோ ஒன்றில் சலூன் கடைக்காரர் ஒருவர் தனது கடையை விளம்பரப்படுத்தும் நோக்கில், சிவகார்த்திகேயன், நடிகைகள் ஸ்ரீதிவ்யா, பூனம் பஜ்வா, சினேகா, ராஷ்மிகா மந்தனா ஆகியோரின் புகைப்படத்தை மொட்டை தலையுடன் இருக்கும்படி எடிட் செய்து பேனராக வைத்துள்ளார்.

சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வரும் இந்த வீடியோ வேளாங்கண்ணியில் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதைப் பார்த்த நெட்டிசன்கள், விளம்பரத்துக்காக இப்படியா பண்ணுவீங்க என கிண்டலடித்து ஏராளமான மீம்ஸ்களை பறக்கவிடுகின்றனர்.