• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

சேலம் மாவட்ட பா.ஜ.க செயலாளர் அக்கட்சியில் இருந்து விலகல்..!

Byவிஷா

Mar 24, 2023

சேலம் மாவட்ட பா.ஜ.க செயலாளர் குட்டி என்கிற சோலை குமரன் என்பவர் அக்கட்சியில் இருந்து திடீரென விலகி இருப்பது அக்கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர்..,
சேலம் மாவட்டத்தில் பாஜக இல்லாமல் போகும் நிலைமை உருவாகி உள்ளது. இதற்கு காரணம் இங்கு உள்ள முக்கிய நிர்வாகிகள் தான் என குற்றம் சாட்டினார். சேலம் கிழக்கு மாவட்டத்தில் நான் உட்பட ஏராளமான நிர்வாகிகள் மிகுந்த அதிருப்தியில் உள்ளதால் தான் இந்த முடிவை எடுத்ததாக தெரவித்தார். என்னை போல் இன்னும் ஆயிரக்கணக்கானோர் இந்த கட்சியை விட்டு வெளியேறி உள்ளதாக கூறினார். எனது தலைமையில் கட்சிக்கு வந்த அனைவருமே தற்பொழுது பாஜகவை விட்டு வெளியேறி விட்டனர். சேலம் கிழக்கு மாவட்டத்தில் கட்சி பணிகள் செய்வதற்கு தடை மற்றும் குளறுபடிகள் ஏற்படுத்தி வருவதாகவும் குற்றச்சாட்டை தெரிவித்தார். பாஜக நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகி வருவது அண்ணாமலையை அதிர்ச்சி அடையவைத்துள்ளது.