• Wed. Dec 10th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

எலுமிச்சம்பழம் விலை கிலோ ரூ.100 விற்பனை: விவசாயிகள் மகிழ்ச்சி

ByG.Suresh

May 4, 2024

கோடை காலம் என்பதால் எலுமிச்சம்பழம் விலை கிலோ ரூ.100 விற்பனை செய்வதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
பல மாவட்டங்களில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் இளநீர்,மோர், கரும்பு ஜூஸ், சர்பத், எலுமிச்சை ஜூஸ் உள்ளிட்டவற்றை அருந்து கின்றனர். சிவகங்கை அருகே தேவணிபட்டியில் சுமார் 10 ஏக்கருக்கு மேல் நாட்டு எழும்மிச்சை பழ ரங்களை பயிரிட்டுள்ளனர். இங்கு விளையக்கூடிய எழுமிச்சையை சிவகங்கை, மேலூர், மடப்புரம் உள்ளிட்ட ஊர்களிலுருந்து வியாபாரிகள் வாங்கி செல்கின்றனர். இந்நிலையில் மார்ச் மாதத்திற்கு முன்பு கிலோ ரூ.40 முதல் 50 ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளனர். கடத்த சில வாரங்களாக வெளியில் அதிகமாக உள்ளது. மேலும் சர்பத், எழுமிச்சை ஜூஸிற்கு எழுமிச்சை பழத்தின் தேவை அதிகரிப்பால் தற்போது கிலோ ரூ.100க்கு விவசாயிகள் விற்பனை செய்கின்றனர். கோடை வெயிலின் தாக்கத்தினால் விலை குறைய வாய்ப்பில்லை என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இது விவசாயி மாதவன் கூறியதாவது:
நான் 15 வருடங்களுக்கு மேலாக இந்த எழுமிச்சை விவசாயம் செய்து வருகிறேன்.சீசன் இல்லாத நேரத்தில் 40 ரூபாய்க்கு போகும். தற்போது சீசன் துவங்கினாலும் விளைச்சல் குறைவாகவே உள்ளது. இதனால் கிலோ 100 ரூபாய்க்கு விற்பனை செய்கிறோம். கொரோனாவிற்கு பிறகு இந்த வருடம் நல்ல விலை கிடைத்துள்ளது என்றார்.