கன்னியாகுமரி மாவட்டம் மாத்தூர் தொட்டி பாலம் இது 1966 ம் ஆண்டு கல்வி தந்தை பெருந்தலைவர் கு.காமராஜர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்டது. இதன் நினைவாக அவர் புகைப்படம் வைத்த கல்வெட்டு தூண் நிறுவப்பட்டு இருந்தது. இந்த கல்வெட்டு தூண் மர்ம நபர்களால் உடைத்து சேதப்படுத்தப்பட்டுள்ளது. இங்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வது உண்டு. இந்த சுற்றுலா தலத்தில் மக்கள் பாதுகாப்புக்காக எந்த ஒரு கண்காணிப்பு கேமராக்களும் கிடையாது. பொதுமக்களுக்கு எந்த ஒரு பாதுகாப்பும் இல்லாத சூழ்நிலையில் திருவட்டார் ஊராட்சி நிர்வாகம் வருடந்தோறும் ஏலம் அறிவித்து அதன் தொகையை பெற்று கொண்டு எந்த ஒரு கட்டுப்பாடுகளும் இல்லாமல் நடைபெற்று வருகின்றது. ஏலம் எடுக்கும் பணம் என்ன ஆச்சு??.இந்த பிரச்சனையினை காவல் துறை அதிகாரிகள் மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு சுற்றுலா வரகூடிய பொதுமக்களுக்கு பாதுகாப்பினை பலப்படுத்த வேண்டும். உடைக்கப்பட்ட பெருந்தலைவர் கு.காமராஜர் கல்வெட்டு அதே இடத்தில் நிலவ வேண்டும் என்று தமிழ்நாடு மக்கள் நீதி பாதுகாப்பு சங்கம் சார்பாக கௌரவ தலைவர் P.குணா MA கோரிக்கை வைக்கின்றேன். முறையான நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் தமிழக முதல்வருக்கு இந்த பிரச்சனையினை தமிழ்நாடு மக்கள் நீதி பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் கொண்டு சென்று தீர்வு கிடைக்க நடவடிக்கை மேற்கொள்வோம் என்பதை தெரிவித்து கொள்கின்றோம்.
