• Thu. May 7th, 2026
WhatsAppImage2026-05-05at001329
previous arrow
next arrow
Read Now

உலக மகளிர் தினத்தை முன்னிட்டு சாதனா விருதுகள்..,

BySeenu

Mar 7, 2026

கோவையில் பிக்கி மகளிர் அமைப்பு, உலக மகளிர் தினத்தை முன்னிட்டு சாதனா விருதுகள் வழங்கி கோயம்புத்தூரின் இளம் பெண் சாதனையாளர்களை கவுரவித்தது.

இந்திய தொழில் வர்த்தக சபையின் மகளிர் பிரிவான பிக்கி மகளிர் அமைப்பின் கோயம்புத்தூர் பிரிவு தலைவர் டாக்டர் அபர்ணா சுங்கு தலைமையில், சாதனா விருதுகள் 2026 என்ற நிகழ்வு தி ரெசிடென்சி டவர் ஹோட்டலில் நடைபெற்றது.

இந்த விருது பல்வேறு துறைகளில் குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்து, அடுத்த தலைமுறை தலைவர்களுக்கு ஊக்கமளிக்கும் கோவையைச் சேர்ந்த ஐந்து இளம் பெண் சாதனையாளர்களை அங்கீகரிக்கிறது. இந்த விழாவில் நடிகரும் ஆரோக்கிய வாழ்விற்கான ஆலோசகருமான லிசா ரே கௌரவ விருந்தினராக கலந்து கொண்டு, விருது பெற்றவர்களை பாராட்டினார்.

சாதனா விருதுகள் போன்ற முன்முயற்சிகள் மூலம், பிக்கி மகளிர் அமைப்பின் கோயம்புத்தூர் சமூகத்தில் அர்த்தமுள்ள மாற்றத்தை உருவாக்கும் பெண்களை அங்கீகரிப்பது, கொண்டாடுவது மற்றும் அவர்களுக்கு அதிகாரம் அளிப்பது ஆகியவற்றைத் தொடர்வது குறிப்பிடத்தக்கது.