• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

பங்குனி உத்திர பூஜைகளுக்காக சபரிமலை நடை திறப்பு..!

Byவிஷா

Mar 27, 2023

பங்குனி உத்திர பூஜைகளுக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை நேற்று மாலை திறக்கப்பட்டது.
ஜெயராமன் நம்பூதிரி தலைமையில் சன்னதி திறக்கப்பட்டு தீபம் ஏற்றப்பட்டது. அதன்பின் மேல்சாந்தி கணபதி, நாகர் உபதெய்வ கோவில்கள் திறக்கப்பட்டு 18ம் படியில் தீபங்கள் ஏற்றப்பட்டன. கண்டரர் ராஜீவர் பக்தர்களுக்கு விபூதி பிரசாதம் வழங்கினார். மாளிகப்புரம் மேல்சாந்தி வி.ஹரிஹரன் நம்பூதிரி மாளிகாபுரம் கோயில் திடலை திறந்து வைத்து தீபம் ஏற்றுகிறார். மாலை 6 மணிக்கு திருவிழாவை முன்னிட்டு சுத்திகரிப்பு நிகழ்ச்சிகள் நடந்தன.