சபரிமலை ஐயப்பன் கோவிலில் புதிய மேல்சாந்தியாக அருண்குமார் நம்பூதிரி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஐப்பசி மாத பூஜைகள் இன்று முதல் தொடங்குகிறது. இதையொட்டி, இன்று மாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட இருக்கிறது. தந்திரி கண்டரர் ராஜீவரர் முன்னிலையில் மேல்சாந்தி மகேஷ் நம்பூதிரி நடையை திறந்து வைப்பார். வரும் 21ம் தேதி வரை கோவில் நடை திறக்கப்பட்டிருக்கும். அதுவரையில் தினமும் காலையில் நெய் அபிஷேகம் நடைபெறும்.
இந்த நிலையில், கேரள மாவட்டம் கொல்லம் மாவட்டத்தை சேர்ந்த அருண் குமார் நம்பூதிரி, சபரிமலை ஐயப்பன் கோவில் மேல்சாந்தியாக தேர்வு செய்ப்பட்டார். இவர் கார்த்திகை 1 முதல் பொறுப்பேற்பார். மாளிகைபுரம் கோவில் மேல்சாந்தியாக கோழிக்கோட்டை சேர்ந்த வாசுதேவன் நம்பூதிரி தேர்வு செய்யப்பட்டார். பந்தளம் அரண்மனை ரிஷிகேஷ் வர்மா குடவோலை மூலம் இவரகளைத் தேர்வு செய்தார்
சபரிமலை ஐயப்பன் கோவில் புதிய மேல்சாந்தி தேர்வு
