விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி தேர்வு நிலை பேரூராட்சியில் புதிய செயல் அலுவலராக செ.முருகன் இன்று (ஆகஸ்ட்-3) பொறுப்பேற்றுக் கொண்டார். இதற்கு முன்பு காரியாபட்டி முதல் நிலை பேரூராட்சியாக இருந்த போது செயல் அலுவலராக பணியாற்றியது குறிப்பிடத்தக்கது. தற்போது பதவி உயர்வு பெற்று காரியாபட்டி தேர்வு நிலை பேரூராட்சியில் இன்று பதவி ஏற்றுள்ளார். அவருக்கு பல்வேறு தரப்பினர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.