• Fri. Dec 12th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

எஸ். பி. வேலுமணி இல்ல திருமண விழா – மத்திய அமைச்சர் எல் முருகன், பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை பங்கேற்பு !!!

BySeenu

Mar 3, 2025

அ.தி.மு.க வின் தலைமை நிலைய செயலாளரும் அ.தி.மு.க வின் முன்னணி தலைவர்களில் ஒருவருமான முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணியின், மகன் விஜய் விகாசுக்கு கோவை ஈச்சனாரி பகுதியில் அமைந்து உள்ள செல்வம் மஹாலில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏ க்கள் மற்றும் பல்வேறு கட்சி அரசியல் பிரமுகர்கள் நேரில் கலந்து கொண்டனர். கட்சி பாகுபாடு பாராமல் அரசியல் பிரமுகர்கள், தொழில் அதிபர்கள், நடிகர் நடிகைகள் என பல்வேறு தரப்பினரும் திருமண விழாவில் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார். குறிப்பாக பா.ஜ.கவை சேர்ந்த தமிழிசை சௌந்தரராஜன், எல்.முருகன், குஷ்பூ மற்றும் மாநிலத் தலைவர் அண்ணாமலை ஆகியோர் எஸ்.பி வேலுமணியின் இல்ல திருமண விழாவில் கலந்து கொண்டு உள்ளது பேசு பொருளாக உள்ளது.

சமீபத்தில் எஸ்.பி வேலுமணி பா.ஜ.க வின் மூத்த தலைவரை நேரில் சந்தித்து பேசியதன் மூலம், மகனின் திருமண விழாவிலும் பா.ஜ.க வை சேர்ந்த தலைவர்கள் கலந்து கொண்டு இருப்பது, வருகிற தேர்தலில் பா.ஜ.க வுடன் கூட்டணி அமையுமா ? என்ற கேள்விகளும் தற்போது எழுந்து இருக்கிறது. 2026 சட்டசபை தேர்தலுக்கு முன்னதாக நடைபெற்று இருக்கும் எஸ்.பி வேலுமணியின் இல்ல திருமண விழா அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் பார்க்கப்படுகிறது.