• Mon. Oct 2nd, 2023

ரஷ்ய விமானங்கள் பறக்க தடை

ரஷ்ய விமானங்கள் தங்கள் வான்வெளியை பயன்படுத்த தடை விதித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உத்தரவு. உக்ரைனில் தொடர்ந்து ரஷ்ய படைகள் உக்கிரமாக தாக்குதல் நடத்தி வருகின்றன.அந்த வகையில்,தலைநகர் கீவ் பகுதியில் ரஷ்ய படைகள் நுழைந்து தாக்குதல் நடத்தி வருகின்றன.

அதன்படி,நேற்று ரஷ்யா உக்ரைனிலுள்ள உலகின் மிகப்பெரிய கோபுரங்களில் இரண்டாவது இடத்திலுள்ள கீவ் டிவி கோபுரத்தின் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியது.இதில் உக்ரைன் மக்கள் சிலர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதனிடையே,உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி வரும் ரஷ்யா மீது பல்வேறு நாடுகள் பொருளாதார தடைகள் விதித்து வருகின்றன.இந்த சூழலில்,ரஷ்ய விமானங்கள் அமெரிக்க வான்வெளியை பயன்படுத்த தடை விதிக்கப்படவுள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியானது.

இந்நிலையில்,அமெரிக்க நாடாளுமன்றத்தில் தற்போது அந்நாட்டு அதிபர் ஜோ பைடன் உரையாற்றி வருகிறார்.அப்போது,தங்கள் நாட்டு வான்வெளியில் இனி ரஷ்ய விமானங்கள் பறக்க தடை விதித்து அமெரிக்க அதிபர் பைடன் உத்தரவிட்டுள்ளார்.
ஏற்கனவே,தங்கள் நாட்டில் ரஷ்ய விமானங்கள் பறக்க கனடா,ஐரோப்பிய நாடுகள் தடை விதித்த நிலையில், தற்போது அமெரிக்காவிலும் தடை விதிப்பதாக பைடன் அறிவித்துள்ளார்.

மேலும்,உக்ரைனில் உள்ள ரஷ்ய படைகளுடன் அமெரிக்க ராணுவம் மோதாது எனவும் ,ஆனால்,ரஷ்யா செய்து வரும் குற்றங்களை கண்டறிய சிறப்புக் குழு உக்ரைனுக்கு அனுப்பி வைக்கப்படும் எனவும் ஜோ பைடன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *