• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

ஆர் எஸ் எஸ் பேரணி என்பது அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது.., பேராசிரியர் ஜவாஹிருல்லா குற்றச்சாட்டு…

Byஜெ.துரை

Oct 7, 2024

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சார்பாக நான்காம் ஆண்டு தென்னிந்திய கராத்தே போட்டிகள் சென்னை கொடுங்கையூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

பல்வேறு பிரிவுகளின் கீழ் நடைபெற்ற கராத்தே போட்டிகளில் 800க்கும் மேற்பட்ட வீர, வீராங்கனைகள் கலந்து கொண்டனர் கராத்தே போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா சான்றிதழ்களையும் பரிசுக் கோப்புகளையும் வழங்கி வாழ்த்தினார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பேராசிரியர் ஜாவாஹிருல்லா.., தமிழ் மாநில முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சார்பாக, ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த கராத்தே போட்டியில் வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டதாகவும், தொடர்ந்து இளைஞர்களின் விளையாட்டு திறமையை கண்டறிந்து ஊக்குவிக்கும் விதமாக இது போன்ற போட்டிகள் நடத்தப்படுவதாக தெரிவித்தார்.

தொடர்ந்து பேசியவர் நடிகர் விஜய் அவர்கள் நடத்த கூடிய மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி வழங்கவில்லை என்பது ஏற்க முடியாதது. காவல்துறை அவர்களுக்கு உரிய அனுமதி வழங்க இருப்பதாக கூறினார்.

இந்தியாவில் உள்ள ஒவ்வொருவருக்கும் அரசியல் கட்சி தொடங்குவதற்கான உரிமைகள் உள்ளது எனவே விஜய் அவர்கள் கட்சி தொடங்கியிருக்கிறார். வரும் நாட்களில் தான் அவரது கட்சி மணக்கும் பூவா அல்லது வெற்று காகித பூவா என்பது அவர்களின் செயல்பாடுகளின் மூலம் தெரியவரும் என கூறினார்.

பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் நடத்திய வரும் தாக்குதலுக்கு இந்தியா உதவி வருவது கண்டனத்திற்குரியது என கூறினார்.

ஹரியானா மற்றும் ஜம்மு, காஷ்மீரில் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்கும் என தேர்தலுக்குப் பிந்திய கருத்துக்கணிப்புகள் வெளியாகியுள்ளது வரவேற்புக்கு உரியது. தமிழகத்தில் அமைந்தது போல இந்தியா கூட்டணி அனைத்து மாநிலங்களிலும் அமைந்திருந்தால் பாஜக அரசு நிச்சயம் தூக்கி எறியப்பட்டு இருக்கும் எனக் கூறினார்.

ஆர். எஸ். எஸ். அமைப்பின் ஊர்வலம் என்பது அரசியல் அமைப்புக்கு எதிரான ஒன்று எல்லோரும் நினைப்பது போல ஆர் எஸ் எஸ் என்றால் இஸ்லாமிய மதத்திற்கு மட்டும் எதிரானது அல்ல பிற்படுத்தப்பட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட பட்டியலின மக்களுக்கும் எதிரான கொள்கைகளை கொண்டது தான் ஆர்எஸ்எஸ் அமைப்பு என குற்றம் சாட்டினார்.