புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்ட ஊரக வளர்ச்சி அலுவலக சார்பில் மத்திய அரசின் தூய்மை பாரத் மிஷன் கிராமின் கீழ் வீடுகள் தோறும் கழிவறை திட்டம் செயல்படுத்தபட்டு வருகிறது. அதன்படி காரைத்தால் மாவட்ட ஊரக வளர்ச்சி அலுவலகம் சார்பில் 10,592 வீடுகளுக்கு கழிவறை கட்ட முடிவு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்ற வந்தது. இந்த நிலையில் தடந்த 2018ம் ஆண்டு வட்டார வளர்ச்சி அலுவலக அதிகாரியாக பிரேமா பொறுப்பு ஏற்றுகொண்டார்.

பின்னர் அவர் வேறு துறைக்கு மாற்றப்பட்டு கடந்த 2020ம் ஆண்டு புதிதாக பொறுப்பேற்ற வட்டார வளர்ச்சி அதிகாரி ரங்கநாதன் என்பவர் மத்திய அரசின் கழிப்பறை திட்டம் ஆவணங்களை தணிக்கை செய்தபோது கழிப்பறை திட்டத்தில் முன்னாள் வட்டார வளர்ச்சி அதிகாரி பிரேமா முறைகேடு செய்தது தெரியவந்தது. இதுகுறித்து ரங்கநாதன் புதுச்சேரி லஞ்ச ஒழிப்பு துறையில் புகார் அளித்தார்.
இந்த புகாரில் மத்திய அரசின் கழிப்பறை திட்டத்தில் பிரேமா ரூ.78.80 லட்சம் முறைகேடு செய்து உள்ளதாகவும் புதுச்சேரி கணக்கு மற்றும் கரூவூலங்கள் அதிகாரிகள் தணிக்கை செய்ததில் உறுதி செய்யப்பட்டது. மேலும் முறைகேட்டில் ஈடுபட்ட பிரமோ மற்றும் 12 கட்டமைப்பாளர்கள் மீது ஊழல் தடுப்பு சட்டம் உட்பட்ட 8 பிரிவின் கீழ் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் வழக்குபதிந்து உள்ளனர். தொடர்ந்து தனிப்படை அமைத்து அரசு அதிகாரி மற்றும் ஒப்பந்தாரர்களை கைது செய்ய நடவடிக்கையில் போலீசார் இறங்கியுள்ளனர்.