• Mon. Nov 24th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

நாகப்பட்டினம் அருகே தேர் சக்கரத்தில் சிக்கி வாலிபர் பலி- ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு

ByA.Tamilselvan

Apr 30, 2022

கடந்த சில தினங்களுக்கு முன் தஞ்சை தேர்விபத்தில் 11 பேர் பலியான சம்பவம் தமிழக முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.அந்த சம்பவத்தை போலவே தற்போது நாகப்பட்டினம் அருகே தேர் சக்கரத்தில் சிக்கி வாலிபர் ஒருவர் பலியாகி உள்ளார்.தேர்விபத்தில் பலியான வாலிபர் குடும்பத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாவின் நிவாரணம் அறிவித்துள்ளார்.
இது குறித்து முதலமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில்
நாகப்பட்டினம் மாவட்டம் திருச்செங்காட்டாங்குடியில் இன்று அதிகாலை நடைபெற்ற சப்பரத் திருவிழாவில், சப்பரத்திற்கு முட்டுக்கட்டை போடும்போது அதிலிருந்து நிலைதடுமாறி கீழே விழுந்த திருக்கண்ணபுரத்தை சேர்ந்த பன்னீர்செல்வம் என்பவரின் மகன் தீபராஜ் மீது சப்பரம் ஏறியதால் பலத்த காயமடைந்தார். அவரை மீட்டு நாகப்பட்டினம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு எடுத்துச்செல்லும் வழியிலேயே உயிரிழந்தார் என்ற துயரமான செய்தியினை கேள்வியுற்று மிகுந்த வேதனையடைந்தேன். உயிரிழந்தவரின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தாருக்கு ரூபாய் ஐந்து லட்சம் உடனடியாக முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து நிதியுதவி வழங்கிட உத்தரவிட்டுள்ளேன்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.