• Thu. Mar 26th, 2026
WhatsAppImage2026-03-25at0556534
previous arrow
next arrow
Read Now

உரிய ஆவணம் இன்றி ஊர் பிரமுகர் கொண்டு வந்த ரூ 1 லட்சம் பறிமுதல்..,

-வேடசந்தூர் அருகே உரிய ஆவணம் இன்றி ஊர் பிரமுகர் உரிய ஆவணம் இன்றி ஊர் பொதுப்பணத்தை கொண்டு வந்த ரூ 1 லட்சத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் – அழகாபுரி சாலையில் வெரியம்பட்டி அருகே பறக்கும் படை அலுவலர் கருப்பாயி தலைமையிலான குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

அப்போது அவ்வழியாக வெரியம்பட்டியைச் சேர்ந்த ஊர் பிரமுகர் மாரிமுத்து என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளை பறக்கும் படையினர் சோதனை செய்தபோது எந்தவித ஆவணம் இன்றி அவர் வைத்திருந்த ரூ 1,11,500 வைத்திருந்தார். அவரிடம் அலுவலர்கள் விசாரணை நடத்திய போது ஊர் பொது மக்களுக்களிடம் கோவிலுக்காக வசூல் செய்யப்பட்ட பணம் என்று கூறினார்.

ஆனால் அந்தப் பணத்திற்கு எந்த வித ஆவணம் இல்லாததால் பறக்கும் படையினர் பறிமுதல் செய்த பணத்தை வேடசந்தூர் தேர்தல் நடத்தும் உதவி அலுவலர் ராஜேந்திரனிடம் ஒப்படைத்தனர்.