மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் திண்டுக்கல் சீனிவாசனுக்கு ஆர்பி உதயகுமார் தலைமையில் வரவேற்பு அளித்தனர்.
பசும்பொன் முத்துராமலிங்க தேவர் தங்க கவசத்தை ஒப்படைக்க மதுரை மாவட்டம்
வாடிப்பட்டிக்கு வருகை தந்த திண்டுக்கல் சீனிவாசனுக்கு முன்னாள் அமைச்சர் ஆர். பி. உதயகுமார் தலைமையில் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களால் பசும்பொன் தேவர் திருமகனார் நினைவிடத்தில் பசும்பொன் தேவருக்கு தங்க கவசம் வழங்கப்பட்டிருந்தது. இந்த தங்க கவசத்தை வருடம்தோறும் அதிமுகவின் பொருளாளர் எடுத்து முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தி விழா நடைபெறும் மூன்று நாட்கள் பசும்பொன்னில் வைத்து விட்டு, பின்னர் மீண்டும் அதை கொண்டு வந்து வங்கியில் வைப்பது தொடர்ந்து நடைபெறும் வழக்கமாக இருந்து வருகிறது.

அதேபோன்று இந்த ஆண்டு சென்ற 26 ஆம் தேதி மதுரை அண்ணா நகரில் உள்ள தனியார் வங்கியில் இருந்த தேவர் தங்க கவசத்தை எடுத்து பசும்பொன்னில் தேவர் ஜெயந்திக்காக வைத்திருந்தனர்.
இந்த நிலையில் தேவர் ஜெயந்தி விழா நிறைவடைந்ததை ஒட்டி தங்க கவசத்தை வங்கியில் மீண்டும் ஒப்படைக்கும் நிகழ்ச்சிக்காக அதிமுகவின் பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் மதுரை வாடிப்பட்டிக்கு வருகை தந்தார். அவரை மதுரை புறநகர் மேற்கு மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் ஆர். பி. உதயகுமார் தலைமையில் அதிமுகவினர் உற்சாகமாக வரவேற்றனர். இதில் முன்னாள் எம்எல்ஏக்கள், எம். வி. கருப்பையா மாணிக்கம், ஒன்றிய செயலாளர்கள் வாடிப்பட்டி மு.காளிதாஸ், அலங்காநல்லூர் ரவிச்சந்திரன், கொரியர் கணேசன், அரியூர் ராதாகிருஷ்ணன், செல்லம்பட்டி எம். வி. பி. ராஜா, வாடிப்பட்டி யூனியன் சேர்மன் ராஜேஷ் கண்ணாண, பேரூர் செயலாளர்கள் வாடிப்பட்டி அசோக், சோழவந்தான் முருகேசன், நிர்வாகிகள் பாசறை மணிமாறன், வாவிடமருதூர் குமார், கோட்டைமேடு பாலா, முடுவார்பட்டி ஜெயச்சந்திர மணியன், முத்துக்கிருஷ்ணன், மன்னாடிமங்கலம் ராஜபாண்டி, வாடிப்பட்டி ராமசாமி, குருவித்துறை வழக்கறிஞர் காசிநாதன், சோழவந்தான் ஜெயபிரகாஷ் மற்றும் நிர்வாகிகள் தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.