• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

சுட்டுப் பிடிக்கப்பட்ட ரவுடி பாம் சரவணனுக்கு ஜன.30 வரை நீதிமன்ற காவல்!

ByP.Kavitha Kumar

Jan 17, 2025

ரவுடி பாம் சரவணனுக்கு ஜன.30 வரை நீதிமன்ற காவலில் வைக்க எழும்பூர் நீதிமன்ற பத்தாவது நீதித்துறை நடுவர் ரேவதி உத்தரவிட்டுள்ளார்.

சென்னை புளியந்​தோப்பு வெங்​கடேசபுரத்தை சேர்ந்தவர் சரவணன் என்ற பாம் சரவணன் (41). பிரபல ரவுடியான இவர் மீது 6 கொலை வழக்​கு​கள், 2 வெடிகுண்டு வீசிய வழக்கு உட்பட 26 வழக்​குகள் உள்ளன. இதில் 3 கொலை வழக்​கு​களில் இவரை பிடிக்க உயர்​நீ​தி​மன்றம் உத்தர​விட்​டது. அவர் தலைமறைவான நிலை​யில் சென்னை காவல் துறை பல்வேறு இடங்​களில் தனிப்படை அமைத்து சரவணனை தேடும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலை​யில் சரவணன் ஆந்திரா​வில் இருப்​பதாக கிடைத்த தகவல் அடிப்​படை​யில் தனிப்படை போலீசார் அங்கு விரைந்து சென்​றனர். அங்கு சித்தூர் மாவட்டம் வரதப்​பாளையம் பகுதி​யில் ரவுடி பாம் சரவணன் தப்ப முயன்ற போது போலீசார் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனர். பின் சென்னைக்கு அழைத்து வந்தனர். ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் பாம் சரவணனுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது

போலீசார் கைது செய்துள்ள ரவுடி பாம் சரவணனுக்கு ஜன.30 வரை நீதிமன்ற காவல் எழும்பூர் நீதிமன்ற பத்தாவது நீதித்துறை நடுவர் ரேவதி உத்தரவிட்டார்.
அறுவை சிகிச்சை முடிந்து பொது வார்டில் இருக்கும் பாம் சரவணன் இன்று கைதிகள் வார்டுக்கு மாற்றப்படுவார் என போலீசார் தெரிவித்தனர்.