சமூகம் சார்ந்த நலப்பணிகளில் தொடர்ந்து செயல்பட்டி வரும் , ரோட்டரி சங்கங்கள் சமூக நலன் சார்ந்த பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் புதிதாக உருவான ரோட்டரி கிளப் 3206 மாவட்டத்தின் புதிய ஆளுனராக தேர்வு செய்யப்பட்ட ரொட்டேரியன் செல்லா ராகவேந்திரன் பதவி ஏற்பு விழா கோவை நவ இந்தியா பகுதியில் உள்ள எஸ்.என்.ஆர்.அரங்கில் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் பல்வேறு ரோட்டரி கிளப் கிளை நிர்வாகிகள்,உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டு புதிய கவர்னருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
தொடர்ந்து சமூக நல திட்டங்களுக்கு என நன்கொடைகளை ரோட்டரி கிளப் நிர்வாகிகள் வழங்கினர். தொடர்ந்து, புதிதாக பதவி என்ற ரோட்டரி 3206 மாவட்ட ஆளுநர் செல்லா ராகவேந்திரன் செய்தியாளர்களிடம் கூறுகையில், ரோட்டரி தொடர்ந்து பல்வேறு சேவைகளை செய்து வருவதாக குறிப்பட்ட அவர்,
இந்த ஆண்டு பெண் குழந்தைகளுக்கான சிறப்பு திட்டங்கள்,மாற்றுத்திறனாளி மற்றும் சிறப்பு குழந்தைகளுக்கான மருத்துவ உதவி,நாய்கள்,மற்றும் மாடுகள் போன்ற உயிரினங்களுக்கான ஆதரவு அளித்தல்,அன்னதானம்,மற்றும் மன அழுத்தத்தில் இருந்து மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் விடுபட யோகா,உடற்பயிற்சிகள் குறித்த விழப்புணர்வு ஏற்படுத்துவது போன்ற திட்டங்களை செயல் படுத்த உள்ளதாக தெரிவித்தார்…