• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

திருப்பரங்குன்றத்தில் ரோப் கார் திட்டம் தயார்…MLA ராஜன் செல்லப்பா

ByKalamegam Viswanathan

Dec 18, 2024

சட்டமன்றத்தில் பத்து கோரிக்கை வைத்தேன். அதில் ரோப் கார் திட்டத்தை செயல்படுத்த அரசாணை வெளிட்டுள்ளது. 4 திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கியுள்ளது தமிழக அரசு என திருப்பரங்குன்றம் தொகுதி எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பா பேட்டியளித்தார்.

மதுரை திருப்பரங்குன்றம் தொகுதிக்குட்பட்ட சூரக்குளம் கிராமத்தில் நெல்களம் மற்றும் நாடக மேடை அமைப்பதற்கான பூமிபூஜை நடைபெற்றது. இன்று அதற்கான பூமி பூஜை திருப்பரங்குன்ற சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா தலைமையில் நடைபெற்றது. பூமி பூஜை விழாவில் அதிமுக கட்சி நிர்வாகிகள் மற்றும் சூரக்குலம் கிராம மக்கள் பலர் கலந்து கொண்டனர்.

இதில் கலந்து கொண்ட திருப்பரங்குன்ற சட்டமன்ற உறுப்பினர் ராஜன்செல்லப்பா பூமி பூஜைக்கான பணிகளை தொடங்கி வைத்தார். இதன் பின்னர் திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் ராஜன்செல்லப்பா செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது சட்டமன்ற உறுப்பினர் ராஜன்செல்லப்பா கூறுகையில்..,

அதிமுகவுடன் இணைந்து செயல்பட தயார் என்று டிடிவி தினகரன் அறிவிப்பு குறித்த கேள்விக்கு, அதிமுக போர்க்களத்திற்கு தயாராகிவிட்டது. 2026 தேர்தலில் கூட்டணியுடன் எடப்பாடி ஆட்சி அமைப்பார் அதிமுக கூட்டணி எல்லோரும் எதிர்பார்க்கக் கூட்டணியாகவும், வெற்றி கூட்டணியாகவும் அமையும் திமுக எதிர்ப்புணர்வு தமிழகம் முழுவதும் பரவி கிடக்கிறது.

திமுக அரசின் செயலை எதிர்த்து அனைத்து மக்களும் போராட ஆரம்பித்திருக்கிறார்கள். யாரோடு கூட்டு யாரோட கூட்டு இல்லை என்பதை எடப்பாடி அறிவிப்பார். இரட்டை இலை சின்னம் விவகாரம் தொடர்பாக ஓபிஎஸ் இடம் கருத்து கேட்க வேண்டும் என டெல்லி உயர் நீதிமன்றம் அறிவித்தது குறித்த கேள்விக்கு,

ஏற்கனவே தேர்தல் ஆணையமும் உச்ச நீதிமன்றம் உறுதிபடுத்தி சொல்லி விட்டது,

பலர் மற்றும் மூத்த வழக்கறிஞர்கள் மனு கொடுப்பதால் அதை பரிசீலனை செய்ய வேண்டும் என்பதற்காக உயர்நீதிமன்றம், உச்ச நீதிமன்றமும் மனுக்களை பரிசளிக்க வேண்டும் என்பது வழக்கம். இந்த வழக்கை தள்ளுபடி செய்ய :வேண்டும் என்று சிறந்த வழக்கறிஞர்கள், யார் வேண்டுமானாலும் வழக்கு போடலாம் என்றால் எந்த கட்சியும் முழுமையாக இருக்க முடியாது பொதுச் செயலாளருக்கும் இரட்டை இலை சின்னத்துக்கோ விவாதம் என்பது தேவையில்லாத வேலை .

.அதிமுக தேர்தல் பணி நோக்கி சென்று கொண்டிருக்கிறது 2026 தேர்தலுக்கான அடித்தள மற்றும் அடிப்படை பணிகளை செய்து கொண்டிருக்கிறோம் எந்த கூட்டணி இருக்கிறதோ இல்லையோ தமிழக மக்கள் திமுகவின் தவறை சுட்டிக்காட்டுவதிலும், சட்ட ஒழுங்கை கெட்டு கிடக்கிறது, விலைவாசி உயர்ந்திருக்க காரணத்தினால் இதுவே அதிமுகவின் கூட்டணிக்கு வெற்றி என்று தெரிவித்தார்.

திருப்பரங்குன்றம் ரோப்கார் திட்டம் குறித்த கேள்விக்கு.

சட்டமன்றத்தில் 10 5 கோரிக்கைகளை முன் வைத்தேன்.அதில் முக்கியமானது திருப்பரங்குன்றம் காசி விஸ்வநாதர் கோவிலுக்கு ரோப் கார்த்திக் திட்டமாகும் இதனை அரசு 5 கோடி செலவில் அமைக்க செயல்படுவோம் கொடுத்துள்ளது ஆனால் உண்மையில் செயல்படுத்த 13 கோடி ஆகும் என தெரிய வருகிறது.

நிலையூர் கம்பிக்குடி கால்வாயில் நீர் வழி போக்குவரத்து, திருநகர் ஹார்வியபட்டி சாலை அகலப்படுத்துதல், பானா குளம் கம் ஆயில் சுற்றுச்சுவர் எழுப்பி நடைபாதை அமைக்கவும், திருப்பரங்குன்றம் எக்கோ பார்க் அருகில் கூடுதல் பார்க்கிங் வசதியும் உட்பட 10 கோரிக்கைகளை வைத்தேன். ஒன்றை செயல்படுத்துவதற்கு தீர்மானம் நிறைவேற்றுகின்றனர். நான்கு திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளனர் என ஆதங்கத்துடன் MLA ராஜன் செல்லப்பா கூறினார். நான்கு திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளனர் என ஆதங்கத்துடன் MLA ராஜன் செல்லப்பா கூறினார்.