• Tue. Nov 11th, 2025
WhatsAppImage2025-11-07at0137034
previous arrow
next arrow
Read Now

வி.ஜே.எஸ்க்கு ரொமான்ஸ் கொஞ்சம் தூக்கல்! விக்ரம் பட தகவல்!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலக நாயகன் கமல்ஹாசன் நடிக்கும் திரைப்படம் விக்ரம்.

ஆக்ஷன் திரில்லராக உருவாகும் இந்தப் படத்தில் வில்லனாக நடிக்கிறார் விஜய்சேதுபதி. படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது! கடந்த வாரம் படக்குழுவுடன் இணைந்த விஜய் சேதுபதி, தன்னுடைய காட்சிகளை ஒரே ஷெட்யூலாக நடித்து கொடுக்க உள்ளாராம். இந்நிலையில், விக்ரம் படம் குறித்து லேட்டஸ்டாக வெளியாகியுள்ள தகவல்களின்படி, வில்லனாக நடிக்கும் விஜய் சேதுபதிக்கு மூன்று பேர் ஜோடியாக நடிக்கிறார்களாம்.

மைனா நந்தினி, ஷிவானி நாராயணன், விஜே காயத்திரி ஆகியோர் விஜய் சேதுபதிக்கு ஜோடி என கூறப்படுகிறது. கொரோனா காரணமாக தடைபட்ட படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெறுகிறது. கமல்ஹாசன், விஜய்சேதுபதி, பகத்பாசில் ஆகியோரைத் தவிர நரேன், காளிதாஸ், ஜெயராம் உள்ளிட்டோரும் விக்ரம் படத்தில் நடிக்கின்றனர்.

இம்மாதத்தக்குள் சூட்டிங் நிறைவு செய்து, கோடை விருந்தாக மே கடைசியில் விக்ரம் படத்தை ரிலீஸ் செய்ய வேண்டும் என்பது படக்குழுவின் திட்டம். ஏற்கனவே கமல்ஹாசன் பிறந்நாளையொட்டி வெளியிடப்பட்ட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ள நிலையில், விரைவில் அடுத்தடுத்த அப்டேட்டுகளை வெளியிடவும் படக்குழு தயாராகி வருகிறது. இந்தப் படத்தை கமல் ஹாசனின் ராஜ்கமல் இண்டர்நேஷனல் மற்றும் ஆர் மகேந்திரன் ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர்.