
வித்தியாசமான தோற்றத்தில் காணப்படும் அஜித்தின் லேட்டஸ்ட் போட்டோ இணையத்தில் தற்போது செம டிரெண்டிங் ஆகி வருகிறது.
அஜித் நடித்துள்ள வலிமை படம் கிட்டதட்ட மூன்று ஆண்டுகளாக ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்படும் படமாக உள்ளது! பிப்ரவரி 24 ம் தேதி வலிமை உலகம் முழுவதும் மிக பிரம்மாண்டமாக, இதுவரை இல்லாத அளவிற்கு அதிகமான தியேட்டர்களில் ரிலீஸ் செய்ய படக்குழு ஏற்பாடு செய்து வருகிறது. வலிமை ரிலீஸ் தேதி நெருங்கி வருவதாலும், ரிலீசுக்கு முந்தைய வியாபாரத்திலேயே ரூ.300 கோடிக்கும் அதிகமான தொகையை வசூலித்துள்ளது என்பது போன்ற அடுத்தடுத்த தகவல்கள் வெளியாகி வருவதாலும் படத்தின் மீதான எதிர்பார்ப்பு பல மடங்கு அதிகரித்துள்ளது.
இதற்கிடையில் ஹச்.வினோத், போனி கபூர் கூட்டணியில் அஜித் அடுத்தபடியாக நடிக்கும் ஏகே 61 படத்தின் ஷுட்டிங்கும் விரைவில் துவங்கப்பட உள்ளது. இதனால் ஏகே 61 படத்திற்கான அப்டேட்களையும் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் அஜித்தின் லேட்டஸ்ட் போட்டோ ஒன்று இணையத்தில் படுவேகமாக பரவி வருகிறது.
காதில் மின்னும் கம்மல், பெரிய கண்ணாடி, வெள்ளை தாடி, வெள்ளை தலை முடி, கருப்பு நிற கோட் அணிந்து வேற லெவல் வித்தியாசமான லுக்கில் போட்டோவுக்கு போஸ் கொடுத்துள்ளார் அஜித். சென்னையில் உள்ள பிரபல நட்சத்திர ஓட்டல் ஒன்றிற்கு வந்த அஜித்தை அடையாளம் கண்டுபிடித்த அங்கிருந்த ரசிகர்கள் சிலர் அஜித்துடன் போட்டோவும் எடுத்துக் கொண்டனர். இந்த போட்டோக்களை சோஷியல் மீடியாவிலும் பகிர்ந்துள்ளனர். இந்த போட்டோதான் இப்போ இணையத்தில் வைரல்!
