• Mon. Dec 8th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

சுனிதா வில்லியம்ஸை பூமிக்கு அழைத்து வர புறப்பட்டது ராக்கெட்!

ByP.Kavitha Kumar

Mar 15, 2025

சர்வதேச விண்வெளி நிலையத்தில் கடந்த 9 மாதங்களாக சிக்கித் தவித்து வரும் சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் ஆகியோரை பூமிக்கு அழைத்து வர
இன்று அதிகாலை ராக்கெட் புறப்பட்டுச் சென்றுள்ளது.

சர்வதேச விண்வெளி நிலையத்தில் (ஐஎஸ்எஸ்.) கடந்த ஆண்டு ஜூனின் மாதம் ஆய்வுப் பணிக்காக புட்ச் வில்மோர் மற்றும் சுனிதா வில்லயம்ஸ் ஆகிய இருவரும் சென்றனர். அங்கு அவர்கள் இருவரும் எட்டு நாட்கள் தங்கி ஆய்வு பணி மேற்கொள்வதற்காக திட்டமிடப்பட்டிருந்தனர். ஆனால், போயிங்கின் ஸ்டார்லைனர் விண்கலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக பூமிக்குத் திரும்பி வர முடியாமல் கடந்த 9 மாதங்களாக சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் தவித்து வருகின்றனர்.

அவர்கள் இருவரையும் பூமிக்கு அழைத்து வர எலான் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் மற்றும் நாசா இணைந்து பூமிக்கு அழைத்து வர இன்று அதிகாலை 433 மணிக்கு பால்கன் 9 ரக ராக்கெட் அனுப்பப்பட்டது. இந்த ராக்கெட் இன்று இரவு 11.30 மணிக்கு ஐஎஸ்எஸ் செல்லும் என்று கணிக்கப்பட்டுள்ளது. மார்ச் 19-ம் தேதிக்குள் சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் ஆகிய இருவரும் பூமி திரும்புவார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது.

அவர்களுடன் நாசா விஞ்ஞானி நிக் ஹேக், ரஷிய அலெக்சாண்டர் விஞ்ஞானி கோர்புனோவ் ஆகியோரும் பூமிக்கு;j திரும்புவார்கள். இவர்கள் இருவரும் கடந்த செப்டம்பரில் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் வில்மோர் ஆகிய இருவரையும் அழைத்து வருவதற்காக காலியான 2 இருக்கைகளுடன் குரூ டிராகன் விண்கலத்தில் சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.