• Wed. Aug 5th, 2026
WhatsAppImage2026-07-30at222010
previous arrow
next arrow
Read Now

நள்ளிரவில் ‘ஸ்கெட்ச்’ போட்ட கொள்ளையர்கள்..,

BySeenu

May 26, 2026

கோவை, கோவைபுதூர் சரவணா நகர் பகுதியை சேர்ந்த ஓய்வுபெற்ற வங்கி ஊழியரான திருஞான சம்பந்தம் தனது மனைவியுடன் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ள நிலையில் ஒருவர் துபாயில் பணியாற்றி வருகிறார். மற்றொரு மகன் அதே வீட்டில் மேல் மாடியில் வசித்து வருகிறார்.

சம்பவத்தன்று, திருஞானசம்பந்தம் அவரது துணைவியாருடன் உறவினர் வீட்டிற்கு சென்ற நிலையில், நள்ளிரவு 2 மணி அளவில் வீட்டில் உள்ள தென்னை மரத்தின் கிளையை யாரோ இழுப்பது போல் சத்தம் கேட்டு உள்ளது.

இதை அடுத்து வெளியே வந்து பார்த்த போது, தனது தாயின் வீட்டின் பூட்டை மர்ம நபர்கள் இருவர் உடைப்பதை பார்த்து உடனடியாக அவசர போலீஸ் எண்ணிற்கு அழைத்து உள்ளார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசாரை பார்த்ததும் இருவரும் தப்பியோடிய நிலையில் உடுமலையை சேர்ந்த சூர்யா என்பவை போலீசார் கையும், களவுமாக பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.