பாலிவுட் நடிகர் சைஃப் அலிகானை கத்தியால் குத்திய
கொள்ளையனை மும்பை காவல்துறையினர் இன்று கைது செய்தனர்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மன்சூர் அலிகான் பட்டோடி – நடிகை ஷர்மிளா தாகூரின் மகன் சயீப் அலிகான். இவர் ஏராளமான இந்தி திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர். நடிகை கரீனா கபூரை மணந்த இவர் மஹாராஷ்டிராவின் மும்பையில் பாந்த்ராவில், சத்குரு ஷரன் என்ற அடுக்குமாடி குடியிருப்பில் 12வது மாடியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
நேற்று (ஜன.16) அதிகாலை 2.30 மணியளவில் மும்பையில் உள்ள அவரது வீட்டுக்குள் நுழைந்த கொள்ளையன் அவரை, ஆறு முறை கத்தியால் குத்தியதில் ரத்த வெள்ளத்தில் சரிந்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் மும்பை லீலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், சைஃப் அலிகானை கத்தியால் குத்தியவரைக் கண்டுபிடிக்க மும்பை காவல்துறை 20 தனிப்படைகளை அமைக்கப்பட்டன. பாலிவுட் நடிகர் சயிப் அலிகானை வீடு புகுந்து கத்தியால் குத்தியவரை இன்று (ஜன.,17) போலீசார் கைது செய்தனர்.அவரை பாந்த்ரா போலீஸ் ஸ்டேஷனில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.





