மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் உள்ள நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்தில் தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர் சங்க 9வது வட்டக்கிளை மாநாடு நடைபெற்றது. கிளைத் தலைவர் பாஸ்கரன் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் வெற்றி தமிழன் தீர்மானங்களை நிறைவேற்றினார்.

இணைச் செயலாளர் கணேசன் வரவேற்புரை நிகழ்த்தினார். மாவட்டச் செயலாளர் மனோகரன் தொடக்க உரையாற்றினார். கண்ணன் செயலாளர் அறிக்கையும், துரைப்பாண்டி பொருளாளர் அறிக்கையும் வாசித்தனர். மாவட்ட இணைச் செயலாளர் மகேந்திரன் ,மாவட்ட தலைவர் மணிமாறன் பேரணியை துவக்கி வைத்தனர். வட்டக்கிளை தலைவர் சூசைநாதன், தமிழ்நாடு சாலை ஆய்வாளர் சங்கம் பாண்டி கார்த்திக், மாவட்ட பொருளாளர் பாஸ்கரன், நெடுஞ்சாலைத்துறை ஊழியர் சங்கம் ஐயப்பன், கிளை செயலாளர் செந்தில் ராஜா ,தமிழ்நாடு சத்துணவு ஊழியர் கார்த்திக்ராணி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

மாநில பொருளாளர் தமிழ் நிறைவுரை ஆற்றினார். வட்டக் கிளை துணைத் தலைவர் ஏசுதாஸ் நன்றி கூறினார். இதில் சாலை பணியாளர்களின் 41 மாத பணிநீக்ககாலத்தை சென்னை உயர்நீதிமன்ற வழக்கின்படி பணிக்காலமாக முறைப்படுத்த வேண்டும், மாநில நெடுஞ்சாலை ஆணையம் கலைத்திட சாலை பணியாளர் பணியிடங்களை ஒழிக்க கூடாது, தனியார் சுங்கவரி நடத்த அனுமதிக்க கூடாது என்றும் சாலை பணியாளர் பணியிடங்களில் கிராமப்புற இளைஞர்களுக்கு பணி வழங்க வேண்டும், கருணை அடிப்படையில் பணி வழங்க வேண்டும் சாலை பணியாளருக்கு ஊதியத்தில் 10% ஆபத்து படி ,நிரந்தர பயணப்படி ,சீருடை சலவை படி ,வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்த தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.