• Sun. Jun 30th, 2024

காரியாபட்டி வக்கணாங் குண்டு ஊராட்சியில் சாலையோர மரக்கன்றுகள் நடும் திட்டம் துவக்கம்

ByG.Ranjan

Jun 27, 2024

காரியாபட்டி அருகே, வக்கணாங்குண்டு ஊராட்சி யில் சாலை ஓர மரம் வளர்ப்பு திட்டம் துவங்கப்பட்டது. விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி ஒன்றியம், வக்கணாங் குண்டு ஊராட்சி மன்றமும். கிரீன் பவுன்டேஷன் சார்பில் சாலை ஓர மரக்கன்றுகள் நடும் திட்ட துவக்க நிகழ்ச்சி. அல்லிகுளம் கிராமத்தில் நடைபெற்றது.
ஊராட்சி மன்றத் தலைவர் தேவி லட்சுமி சூசைராஜ் தலைமை வகித்தார்.
கிரீன் பவுண்டேசன் நிர்வாகி பொன்ராம முன்னிலை வகித்தார். மரக்கன்றுகள் நடும் பணிகளை 100 நாள் வேலை திட்ட பணியாளர்கள் தொடங்கி வைத்தனர்.

நிகழ்ச்சியில், திருச்சுழி சாலை – அல்லிகுளம் செல்லும் சாலை ஓ ரங்களில் நாள் திட்ட பணியாளர் களின் ஒத்துழைப்போடு மரங்கள் வளர்க்க ஏற்பாடுசெய்யப்பட்டது.
நிகழ்ச்சியில் வழக்கறிஞர் செந்தில்குமார் கிராம பிரமுகர் அய்யலு ரெட்டி, பி.புதுப்பட்டி அரசு மேல் நிலைப் பள்ளி ஆசிரியர்கள், முத்துச்சாமி ஆறுமுகம், உடற்கல்வி ஆசிரியர் நாகராஜ். உட்பட பலர் பங்கேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *