37 வது சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு மதுரை மாநகர போக்குவரத்து காவல் துறை, முதலுதவி சமூக நல அறக்கட்டளை மற்றும் அறந்தாங்கி நிஷா அன்பு அறக்கட்டளை இணைந்து

- மதுரை காமராஜர் சாலை பகுதியில் உள்ள குருவிக்காரன் சாலை சிக்னல் அருகில் சாலை விதிகளை முறையாகப் பின்பற்றி வரும் வாகன ஓட்டிகளுக்கு திருக்குறள் புத்தகம் மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டது.. சாலை பாதுகாப்பு மாதத்தினை முன்னிட்டு மதுரை மாநகர் முழுவதும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டு நடைபெற்று வருகின்றது.
- அதன் நிறைவு நாளான இன்று சாலைவிதிகளை முறையாக கடைபிடித்து இருசக்கர வாகனங்களில் தலைக்கவசம் அணிந்து வந்த வாகன ஓட்டிகளுக்கும் நான்கு சக்கர வாகனங்களில் சீட் பெல்ட் அணிந்து வந்த வாகன ஓட்டிகளை ஊக்குவிக்கும் வகையில் அவர்களுக்கு திருக்குறள் புத்தகம், எழுதுகோல், இனிப்பு பெட்டகம் வழங்கினர்… இந்த நிகழ்வினை தல்லாகுளம் போக்குவரத்து
உதவி ஆணையர் இளமாறன் அவர்கள் தலைமையில் திலகர் திடல் போக்குவரத்து காவல் ஆய்வாளர் தங்கமணி ஆகியோர்கள் வழங்கினார்கள். - இந்நிகழ்வில் சமூக ஆர்வலர் சக்தி முருகன், முதலுதவி சமூக நல அறக்கட்டளையின் மாநிலத் துணைத் தலைவர் செய்யது ரியாஸ் கான் மற்றும் மாநில பொதுச் செயலாளர் மற்றும் அறந்தாங்கி நிஷா அன்பு அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளராக முனைவர் முபின் ஆகியோர்கள் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு சாலைபாதுகாப்பு குறித்த விழிப்புணர்வுகளை வழங்கினர்.











