மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே மன்னாடி மங்கலம் பகுதியில் பொங்கல் திருவிழா கொண்டாடுவதில் இரு பிரிவினருக்கு இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக ஒரு பிரிவினர் மற்றொரு பிரிவினர் பகுதிக்கு சென்று வாக்குவாதம் செய்ததாக கூறப்படுகிறது.

இது குறித்து பாதிக்கப்பட்டவர்கள் காடுபட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர் புகார் அளித்து நீண்ட நேரம் ஆகியும் போலீசார் வர தாமதமானதாக கூறப்படுகிறது இதனால் ஆத்திரமடைந்த பெண்கள் உட்பட பொதுமக்கள் சோழவந்தான் குருவித்துறை மெயின் ரோட்டில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து அங்கு வந்த காடுபட்டி போலீசார் சாலை மறியல் செய்தவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர் ஆனால் தகராறில் ஈடுபட்டவர்களை கைது செய்யும் வரை கலைந்து போக மாட்டோம் என கூறி தொடர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனை அடுத்து போலீசாரின் நீண்ட நேர பேச்சுவார்த்தைக்கு பின்பு அவர்கள் கலைந்து சென்றனர். இரு தரப்பினர் மோதல் காரணமாக சாலை மறியல் செய்ததால் பொதுமக்கள் பயணிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர் இதனால் அந்த பகுதியில் ஒரு பரபரப்பு ஏற்பட்டது.





