திருப்பூர் மாவட்டம் நாச்சிபாளையம் பகுதியில் சாலை விபத்து நடந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டம் மணப்பாறை பகுதியில் இருந்து திருப்பூர் எஸ்.ஏ.பி பகுதியில் உள்ள தனியார் பின்னலாடை நிறுவனத்திற்கு நூல் கோன்களை ஏற்றி வந்த லாரி நள்ளிரவில் நாச்சிபாளையம் பகுதியை கடக்கும் போது லாரிக்கு முன்னால் சென்று கொண்டு இருந்த இரு சக்கர வாகனம் திடீர் என நிறுத்தியதாக கூறப்படுகிறது.
இதனால் லாரியை இருசக்கர வாகன ஓட்டி மீது மோதாமல் தடுக்க வலது புறம் திருப்பிய நிலையில் லாரி வேகமாக சாலையின் மைய தடுப்பில் மோதி நின்றது. இந்த விபத்தில் லாரி ஓட்டுனர் பிரபு அதிஷ்டவசமாக உயிர் தப்பினார். அஜாக்கிரதையாக இருசக்கர வாகனத்தை இயக்கிய நபர் குறித்து, அவினாசிபாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தில் லாரி முன்பக்கம் முழுமையாக சேதம் அடைந்தது.