• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

இந்தியாவில் கச்சா எண்ணெய் விலை உயரும் அபாயம்..!

Byவிஷா

Jul 23, 2022

இந்தியாவில் கச்சாய் எண்ணெய் உற்பத்தி குறைவால் விலை உயரும் அபாயம் உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்தியாவில் கச்சா எண்ணெய் உற்பத்தி சென்ற ஜூன் மாதத்தில் 1.71சதவீதம் ஆகக் குறைந்து 2.43 மில்லியன் டன்களாக உள்ளது. இதே சென்ற ஆண்டு ஜூன் மாதம் கச்சா எண்ணெய் உற்பத்தியானது 2.48 மில்லியன் டன்களாக இருந்தது. ஜூன் மாதத்திற்கான ஓ.என்.ஜி.சி நிறுவனத்தின் உற்பத்தி 1.62 மில்லியன் டன்களாக இருந்தது. இது கடந்த ஆண்டு ஜூன் மாத உற்பத்தியை விட 0.21சதவீதம் அதிகமாகும். ஆனால் இது மாதத்திற்கான இலக்கை விட 1.11சதவீதம் குறைவாக உள்ளது.
2022-23 நிதியாண்டுக்கான இலக்கு 30.84 மில்லியன் டன் அளவு உற்பத்தி செய்ய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் திட்டமிட்டிருந்தது. கடந்த மாதம் கச்சா எண்ணெய் உற்பத்தி 2.51 மில்லியன் டன் இலக்கை விட 3.01மூ குறைவாக இருந்தது. இறக்குமதி அதிகமாகச் சார்ந்திருப்பதைக் குறைக்க, உள்நாட்டில் எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்க இந்தியா முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்தியா தனது ஆற்றல் தேவைகளில் 85சதவீதம் இறக்குமதி வாயிலாகவே பூர்த்தி செய்கிறது.
ரஷ்யா-உக்ரைன் நெருக்கடி மற்றும் உலகளாவிய மந்தநிலை போன்ற பிரச்சினைகளுக்கு மத்தியில் கச்சா எண்ணெய் விலை நிலையற்றதாக இருக்கும்போது கச்சா எண்ணெய் உற்பத்தியில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. மார்ச் மாதம், பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு மீதான ஒரு நிலைக்குழு, உள்நாட்டு எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்க அரசாங்கம் மறுபரிசீலனை செய்யப் பரிந்துரைத்தது. இதற்கான உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் கூறியது.
நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்த அறிக்கையில், நாட்டில் கச்சா எண்ணெய் உற்பத்தியில் புதிய ஆய்வு உரிமக் கொள்கையின் கீழ் எண்ணெய் வயல்களின் “மிகக் குறைந்த” பங்களிப்பு குறித்து குழு கவலையைத் தெரிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

ஜூலை மாத்தில் ஓஎன்ஜிசி 1.63 பில்லியன் கன மீட்டர் எரிவாயுவை உற்பத்தி செய்துள்ளது. இது ஜூன் 2021 உற்பத்தியை விட 2.8சதவீதம் குறைவு. அதே நேரத்தில் ஆயில் இந்தியாவின் எரிவாயு உற்பத்தி 7.22சதவீதம் அதிகரித்து 246.75 மில்லியன் கன மீட்டராக உள்ளது.