உரிய அனுமதி இன்றி பார் செயல்படுவதால் அரசு மதுபான கடையில் குவித்து வைக்கப்பட்டுள்ள பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் காலி மது பாட்டில்களால் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
தேனி மாவட்டம் உத்தமபாளையம் தாலுகா, அரசு மதுபான கடை எண் 8548, செயல்பட்டு வருகிறது. இந்த அரசு மதுபான கடையை சுற்றிலும் பிளாஸ்டிக் கழிவுகள், மது பாட்டில்கள் மலை போல் குவித்து வைக்கப்பட்டுள்ளது.
இதனால் இந்த மது கடைகளை சுற்றிலும் பிளாஸ்டிக் கழிவுகள், மது பாட்டில்கள் திறந்தவெளியில் குடிமகன்கள் அமர்ந்து மதுவை குடித்துவிட்டு மது பாட்டில்கள் பிளாஸ்டிக் கழிவுகளை ஆங்காங்கே வீசிவிட்டு செல்கின்றனர்.
அரசு மதுபான கடையை முன்பாக தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் காலி மது பாட்டில்களால் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்படும் சூழ்நிலை நிலவி வருகிறது.