

உலக நாடுகளை வெப்ப அலைகள் தாக்கும் அபாயம் இருப்பதாக விஞ்ஞானிகள் கணிப்பு.பருவகால மாற்றத்தால் 2100ம் ஆண்டில் வெப்பம் 3 மடங்கு அதிகரித்து உலக நாடுகளை தாக்கும் அபாயம் உள்ளதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. இதுகுறித்து பேசிய ஹார்வர்டு பல்கலை பருவகால ஆய்வாளர் லூக்காஸ் ,மிகவும் தீவிர ஆபத்து விளைவிக்ககூடிய வெப்ப குறியீடானது 124 டிகிரி என்ற அளவில் பதிவாகக்கூடும் என்றார்.மேலும் இந்தியாஉள்ளிட்ட வெப்ப மண்டல பகுதிகளில் ஆண்டுக்கு 4 வாரங்கள் வரை இந்நூற்றண்டின் இறுதியில் இந்த நிலை ஏற்படக்கூடும் என்று எச்சரித்துள்ளார்.
