• Thu. Oct 16th, 2025
WhatsAppImage2025-10-09at2130432
WhatsAppImage2025-10-09at213041
WhatsAppImage2025-10-09at2130401
WhatsAppImage2025-10-09at2130442
WhatsAppImage2025-10-09at2130411
WhatsAppImage2025-10-09at2130444
WhatsAppImage2025-10-09at213044
WhatsAppImage2025-10-09at213040
WhatsAppImage2025-10-09at2130412
WhatsAppImage2025-10-09at2130445
WhatsAppImage2025-10-09at2130443
WhatsAppImage2025-10-09at2130441
WhatsAppImage2025-10-09at213043
WhatsAppImage2025-10-09at2130431
previous arrow
next arrow
Read Now

பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு

ByA.Tamilselvan

May 22, 2022

பொறியியல், பாலிடெக்னிக் படிப்புகளுக்கான கட்டணம் உயர்த்தப்படுவதாக அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் (ஏஐசிடிஇ) அறிவித்துள்ளது.
பி.இ, பி.டெக், பி.ஆர்க் படிப்புகளுக்கு ஒரு செமஸ்டருக்கு குறைந்தபட்சமாக ரூ.79,600 அதிகபட்சமாக ரூ.1,89,800 கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பாலிடெக்னிக் கல்லூரிகளில் டிப்ளமோ படிப்புகளுக்கு ஒரு செமஸ்டருக்கு குறைந்தபட்சம் ரூ.67,900 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக ரூ.1,49,900 ஆக கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது ..
பொறியியல் கட்டணம் உயர்வு அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கழகம் ( ஏஐசிடிஇ) பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம், பேராசிரியர்களுக்கான ஊதியத்தை அதிகரித்து புதிய கட்டண விகிதத்தை வெளியிட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களில் பி.இ, பி.டெக், பி.ஆர்க் படிப்புகளுக்கு ஒரு செமஸ்டருக்கு குறைந்தபட்ச கட்டணம் ரூ.79,600 ஆகவும் அதிகபட்ச கட்டணம் ரூ.1,89,800 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. முன்னதாக குறைந்தபட்ச கட்டணம் ரூ.55,000, அதிகபட்ச கட்டணம் ரூ.1.15 லட்சம் என இருந்த நிலையில் தற்போது கட்டணத்தை உயர்த்தியுள்ளது அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கழகம். பாலிடெக்னிக் கட்டணம் இதேபோல பாலிடெக்னிக் கல்லூரிகளில் டிப்ளமோ படிப்பதற்கான கட்டணம் குறைந்தபட்சமாக ஒரு செமஸ்டருக்கு ரூ.67,900, அதிகபட்சமாக ரூ.1,40,900 என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்கள் குறைந்தபட்ச கட்டணம் – அதிகபட்ச கட்டணத்துக்குள் தங்களுக்கான கட்டணத்தை நிர்ணயம் செய்துகொள்ளலாம் என்று ஏஐசிடிஇ அறிவுறுத்தியுள்ளது. முதுநிலை படிப்புகளுக்கும் எம்.இ, எம்.டெக், எம்.ஆர்க் படிக்க ஒரு செமஸ்டருக்கு குறைந்தபட்சமாக ரூ.1,41,200, அதிகபட்சமாக ரூ.3,04,000 என்று கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 3 ஆண்டு எம்.சி.ஏ படிப்புக்கு குறைந்தபட்சமாக ரூ.88,500, அதிகபட்சமாக ரூ.1,94,100 என்று கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 2 ஆண்டு எம்.பி.ஏ படிப்புக்கு குறைந்தபட்சமாக ரூ.85,000, அதிகபட்சமாக ரூ.1,95,200 என்று கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
மாணவர் சேர்க்கை குறைவாக இருப்பதை காரணம் காட்டி கட்டணத்தை குறைக்கக்கூடாது என்றும் மாணவர் சேர்க்கை குறைவாக இருப்பின், கல்வித் தரத்தை உயர்த்த முயற்சிக்க வேண்டும் என்றும் ஏஐசிடிஇ உத்தரவிட்டுள்ளது. இதனால் மாணவர்களும், பெற்றோர்களும் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர். பேராசிரியர்களுக்கு பொறியியல் கல்லூரிகளில் பணியாற்றும் பேராசிரியர்களுக்கும் 7-வது ஊதிய கமிஷன் வரையறுத்துள்ள ஊதியத்தை வழங்கிட வேண்டும் என்று ஏஐசிடிஇ உத்தரவிட்டுள்ளது. அதன்படி உதவிப் பேராசிரியர்களுக்கு மாதம் ரூ.1,37,189, பேராசிரியர்களுக்கு ரூ.2,60,379 என்று ஊதியம் வழங்கப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.