• Tue. Nov 11th, 2025
WhatsAppImage2025-11-07at0137034
previous arrow
next arrow
Read Now

ரீவைண்ட் : கக்கனுக்காக கோபித்து கொண்ட எம்.ஜி.ஆர்

கக்கனின் வாழ்வில் மிகவும் குறிப்பிடப்படும் ஒரு சம்பவம், எம்ஜி ஆர் காலகட்டத்தில்நடந்தது “கக்கனுக்கு நீண்டகாலமாகவே பார்க்கின்சன் நோய் இருந்து வந்தது.

அவ்வப்போது மருத்துவமனைக்குச் சென்று வருவார். அவர் சுதந்திரப் போராட்ட வீரர் என்பதால், அரசு மருத்துவமனையில் சி வார்டில் இடம் கிடைக்கும். அதாவது ஒரு அறையில் எட்டு கட்டில்கள் இருக்கும். அதுதான் சி – வார்ட். அப்படித்தான் ஒரு முறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த போது முதல்வராக இருந்த எம்.ஜி. ராமச்சந்திரன் அ.தி.மு.க. பிரமுகர் ஒருவரைச் சந்திப்பதற்காக அங்கே வந்தார். உடன் காளிமுத்துவும் வந்தார்.


அப்போது காளிமுத்து முதல்வரிடம், கக்கனும் இதே மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருவதைப் பற்றிச் சொன்னார். அதைக் கேட்ட முதல்வர் அவரையும் சந்தித்துவிட்டுப் போகலாம் என்றார். அப்படிச் சந்திக்கச் சென்றபோது அவர் சி வார்டில் ஒரு கட்டிலில் இருந்ததைப் பார்த்து அதிர்ந்துபோனார். உடனடியாக டீனை அழைத்த முதல்வர், இவர் யார் தெரியுமா, இந்திய அரசியல் சாஸன அவையில் இடம்பெற்றிருந்தவர். இப்படி செய்கிறீர்களே என்று கோபித்துக்கொண்டார். உடனடியாக ஏ வார்டுக்கு மாற்ற உத்தரவிட்டார்.


இந்த சம்பவம் கக்கன் எவ்வளவு எளிமையான மனிதர் என்பதையும் தான் பதவி பணத்தால் ஆடம்பரமாக வாழ விரும்பாத சாமானியர் என்பதையும் எடுத்துதுரைக்கிறது.