தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் நிறுவனமான பொன்மனச் செம்மல் புரட்சித் தலைவர் டாக்டர் எம்ஜிஆர்-ன் 109 வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.

இதன் ஒரு பகுதியாக காரைக்கால் மாவட்ட அதிமுக சார்பில் கிளிஞ்சல்மேடு மீனவ கிராமத்தில் அமைந்துள்ள கட்சியின் நிறுவனத் தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான எம்.ஜி.ஆரின் திருவுருவச் சிலைக்கு முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் அதிமுக மாவட்ட செயலாளருமான எம்.வி.ஓமலிங்கம் தலைமையில், மாநில, மாவட்ட, தொகுதி கழக நிர்வாகிகள் மாலை அணிவித்து மலர் தூவி கழக கொடியை ஏற்றி சிறப்பாக கொண்டாடினர். விழாவில் மாவட்ட, தொகுதி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு எம்.ஜி.ஆர் திருவுருவச் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தி அனைவருக்கும் இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சியாக கொண்டாடினர்.
இதில், மாவட்ட இணை செயலாளர்கள் ஜீவானந்தம், சி.ஆர்.சி ஆரிபு, இணைச்செயலாளர் குரு, வீராசாமி, கருணாநிதி, எம்ஜிஆர் மன்ற ரவி, சிறுபான்மை அணி சகாயராஜ், தம்பிராமதாஸ், நகர செயலாளர் ஜெயராஜ், தொகுதி செயலாளர்கள் முருகன், சுரேஷ், தேவராஜன், மாதவன், கணேசன் மீனவர்கள் செயலாளர் ஜீவானந்தம், துணை செயலாளர் கதிர்வேல், இலக்கிய அணி ஆதிமுத்து, எம்ஜிஆர் மன்ற இளைஞர் அணி செயலாளர் நிஜித் உள்ளிட்ட திரளான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

இது போல் காரைக்காலில் அமைந்துள்ள தமிழக அரசு போக்குவரத்து கழக பணிமனையில் அண்ணா தொழிற்சங்கம் சார்பில் அதிமுக கட்சியின் நிறுவனத் தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான எம்.ஜி.ஆரின் பிறந்த நாள் விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது. அதிமுக கழக கொடி மற்றும் அண்ணா தொழிற் சங்க கொடிகளை அதிமுக மாவட்ட செயலாளர் எம்.வி.ஓமலிங்கம் ஏற்றி வைத்தார். அதனை தொடர்ந்து அனைவருக்கும் இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். காரைக்கால் கிளை அண்ணா தொழிற்சங்கத்தின் சார்பில் நாகை மண்டல பொருளாளர் சி.நமச்சிவாயம், கிளைத் தலைவர் தேவாதிராஜன், தலைவர் மகாவிஷ்ணு, செயலாளர் கேசவன், பொருளாளர் மதியழகன் உள்ளிட்ட பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
முன்னதாக காரைக்கால் புதிய பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டிருந்த எம்.ஜி.ஆரின் திருவுருவப்படத்திற்கு மாவட்ட செயலாளர் எம்.வி.ஓமலிங்கம் உள்ளிட்ட அதிமுகவினர் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
தெடர்ந்து காரைக்கால் அம்மையார் அன்னதான மண்டபத்தில் மாவட்ட செயலாளர் எம்.வி.ஓமலிங்கம் ஏற்பாட்டில் ஏழை எளிய மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதுபோல மாவட்டம் முழுவதும் திருநள்ளாறு, திருப்பட்டினம், நெடுங்காடு, கோட்டுச்சேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் எம்ஜிஆரின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.





