• Sat. Jan 17th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

புரட்சித்தலைவி அம்மா 76 வது பிறந்த நாளை முன்னிட்டு அம்மா உருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை – முதியோர், ஆதரவற்ற குழந்தைகளுக்கு மதிய உணவு

ByG.Suresh

Feb 25, 2024

புரட்சித்தலைவி அம்மா 76 வது பிறந்த நாளை முன்னிட்டு அம்மா உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை மற்றும் முதியோர் , ஆதரவற்ற குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.

முன்னாள் முதல்வர் புரட்சித்தலைவி அம்மா பிறந்தநாளை முன்னிட்டு மாவட்ட செயலாளர் சிவகங்கை சட்டமன்ற உறுப்பினர் செந்தில்நாதன் தலைமையில் சிவகங்கை மாவட்ட அம்மா பேரவை செயலாளர் இராமு. இளங்கோவன் முன்னிலையில் அம்மாவின் திருஉருவபடத்திற்கு மலர் தூவி இனிப்புகள் வழங்கப்பட்டது , அதன்பின்பு சிவகங்கை உடையார் சேர்வை ஊரணி அருகில் உள்ள பாலர் பாதுகாப்புவிடுதியில் அசைவ உணவு வழங்கப்பட்டது. மேலும் காமராஜர் காலனி உள்ள முதியோர் இல்லத்தில் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் தலைமையில் அமைப்பு சாரா ஓட்டுநர் அணி துணைச் செயலாளர் கே அழகர் பாண்டி ஏற்பாட்டில் அசைவ உணவும் வழங்கப்பட்டது மற்றும் சிவகங்கை பேருந்து நிலையம் அருகே உள்ள ஆர்ஆர் மேல்நிலைப் பள்ளியில் மதிய உணவு பேரவை மாவட்ட செயலாளர் தலைமையில் வழங்கப்பட்டது. மேலும், இந்நிகழ்ச்சியில் சிவகங்கை தெற்கு ஒன்றிய செயலாளர் செல்வமணி . நகரச் செயலாளர் ராஜா,மாவட்ட கவுன்சிலர் ராமசாமி ஒன்றிய செயலாளர் சிவ சிவ ஸ்ரீதரன் மாவட்ட மாணவர் அணி இணைச் செயலாளர் அன்பு சிவகங்கை தெற்கு ஒன்றிய மாணவர் அணி ஒன்றிய பொறுப்பாளர் செந்தில் குமார் நகர நிர்வாகிகள் மோகன் கே. பி முருகன் மாவட்ட வர்த்தக அணி செயலாளர் அண்ணன் ராஜேந்திரன் அவர்களும் அதிமுக நிர்வாகிகள் கிருஷ்ணகுமார் ராஜ்குமார் முருகன் மாரிமுத்து சுரேந்திரன் மோகன்புதுப்பட்டி கொங்கேஸ்வரன் சுதாகர் சந்தானம் 19 வட்ட செயலாளர் மகேஷ் குமார் மணிகண்டன் சிரம்பட்டி முனியாண்டி மற்றும் சிவகங்கை நகர நிர்வாகிகள் நிகழ்ச்சிகளை கலந்து கொண்டு சிறப்பித்தனர்.