

சிவகங்கை மாவட்டம் சிவகங்கை ஆட்சியராக வளாகப் பகுதியில் ரூபாய் 1.85 கோடி மதிப்பீட்டில் நூலகம் மற்றும் அறிவுசார் மையத்தினை முதலமைச்சர் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார். நகர் மன்ற தலைவர் மற்றும் அதிகாரிகள் பார்வையிட்டனர்.

சிவகங்கை மாவட்டம் சிவகங்கை ஆட்சியராக வளாகப் பகுதியில் கலைஞர் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூபாய் 1.85 கோடி மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டுள்ள நூலகம் மற்றும் அருவி சார் மையத்தினை இன்று காணொளி காட்சி மூலம் முதல்வர் ஸ்டாலின் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார் இந்நிகழ்ச்சியில்
சிவகங்கை நகராட்சி ஆணையர் செந்தில்குமார் மற்றும் சிவகங்கை நகர் மன்ற தலைவர் துரைஆனந்த் மற்றும் நகர் மன்ற துணைத் தலைவர் கார் கண்ணன் திமுக கட்சியின் நிர்வாகிகள் தொண்டர்கள் பொதுமக்கள் என ஏராளமானோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கட்டிடம் மற்றும் நூலகத்தை பார்வையிட்டனர்.



