• Thu. Nov 27th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

புரட்சி பாரதம் நிறுவனர் நினைவு தினம்

ByN.Ravi

Sep 4, 2024

மதுரை மாவட்டம், மேற்கு ஒன்றியம் சார்பில், புரட்சி பாரதம் கட்சியின் நிறுவன தலைவர் மறைந்த மூர்த்தியாரின் 22-ம் நினைவு நாளை ஒட்டி, ஊமச்சிகுளத்தில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், சுமார் 300 பள்ளி மாணவர்/மாணவிகளுக்கு இலவச நோட்புக் பென்சில், பேனா அடங்கிய கிட் வழங்கப்பட்டது. மேலும், வாய் பேச முடியாத, காது கேளாதவர்க்கு சுமார் 200 நபர்களுக்கு இலவச போர்வை வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு, மாநில துணைச் செயலாளர் சி.முருகேசன், தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளர்களாக வழக்கறிஞர் தலித் தர்மா கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். நலத்திட்ட உதவிகளை, மதுரை கிழக்கு ஒன்றியச் செயலாளர் பரமசிவம் வழங்கினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை, மதுரை மேற்கு ஒன்றிய செயலாளர் வைரமூர்த்தி செய்திருந்தார். நிர்வாகிகள் ரவி, பாலமுருகன், அரங்க பெருமாள் ஆகியோரும் கலந்து கொண்டனர்.