• Tue. Mar 10th, 2026
WhatsAppImage2026-03-05at0942011
previous arrow
next arrow
Read Now

மதுரை புத்தக திருவிழாவில் “விமர்சனப்பதிவுகள்”புத்தகம் வெளியீடு

Byகுமார்

Oct 3, 2022

மதுரையில் நடைபெறும் புத்தகத் திருவிழாவில் “விமர்சனப்பதிவுகள்”புத்தகம் வெளியீடு சிறப்பாக நடைபெற்றது
மதுரை தமுக்கம் மைதானத்தில் நடைபெறும் புத்தகத் திருவிழாவில்முனைவர் சரவணன் ஜோதி எழுதிய
“விமர்சனப்பதிவுகள்” என்னும் நூல் யாவரும் பதிப்பகத்தின் வழியாக புத்தக கண்காட்சியில் வெளியிடப்பட்டது. இந்த நூலினை விமர்சகர் முனைவர் ந.முருகேச பாண்டியன் வெளியிட தூங்கா நகர நினைவுகள் எழுத்தாளர் அ.முத்துகிருஷ்ணன் பெற்றுக் கொண்டார். இரண்டாம் பிரதியை கவிஞர் சக்தி ஜோதியும், தியாகராசர் கல்லூரியின் முன்னாள் முதல்வர் முனைவர் அருணகிரியும் பெற்றுக் கொண்டார்கள் . நிகழ்வில் இறுதியாக எழுத்தாளர் முனைவர் சீ.சரவண ஜோதி ஏற்புரை வழங்கினார். இந்நூல் திறனாய்வு உலகின் மைல்கல். நூலாசிரியரின் விமர்சனப் பதிவுகள் தமிழில் புதுயதொரு தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றன என்று விமர்சனம் செய்யப்பட்டது இந்த நூல் வெளியீட்டு விழாவில் கல்லூரி பேராசிரியர் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.