மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து வருவாய் கிராமங்களுக்கும் 1434 ம் பசலிக்கான வருவாய் தீர்வாயம் ஜமாபந்தி 14.5.2025 முதல் 28.5.2025 வரை அனைத்து வட்டாட்சியர் அலுவலகத்திலும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
அந்த வகையில் மதுரை மேற்கு வட்டத்துக்குட்பட்ட விராட்டிபத்து பகுதியில் உள்ள வட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் ஜமாபந்தி முகாம் வருவாய் தீர்வாய் அலுவலரும் மாவட்ட வழங்கல் அலுவலருமான முத்து முருகேச பாண்டியன் தலைமையிலும் வட்டாட்சியர் செந்தாமரை வள்ளி முன்னிலையில் நடைபெற்றது.

இம்முகாமில் தட்டானூர் விளாச்சேரி வடிவேல்கரை புதுக்குளம் சம்பக்குடி வடபலஞ்சி கரடிபட்டி உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் முதியோர் உதவித் தொகை விதவை உதவித்தொகை வீட்டுமனை தேவைப்படுவோர் உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்காக தங்களது கோரிக்கைகளை மனுக்களாக அளித்தனர்.
இந்நிகழ்வில் சமூக பாதுகாப்பு திட்ட வட்டாட்சியர் நாகரத்தினம்,தலைமைநில அளவையர் சபரிநாதன் மற்றும் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.