• Sat. Jun 13th, 2026
WhatsAppImage2026-06-04at220632
previous arrow
next arrow
Read Now

ரெட்ரோ ஸ்டைல் ரெஸ்டோ பார் துவக்கவிழா நிகழ்ச்சி..,

BySeenu

Jun 13, 2026

இன்றைய நவீன தலைமுறைகள் விரும்பும் வகையில், ப்ரத்யேக க்ளோபல் கிச்சன் வசதிகளுடன் கூடிய ரெட்ரோ ஸ்டைல் ரெஸ்டோ பார் துவக்கவிழா நிகழ்ச்சி, கோவை சிங்காநல்லூர் பகுதியில் உள்ள ஒ பை தாமரா உணவத்தில் துவங்கபட்டுள்ளது.

உணவு பிரியர்களின் விருப்பங்களை பூர்த்தி செய்யும் வகையில், அதன் சுவை மாறாமல் சோசியல் லைப்ஸ்டைல்க்கு ஏற்ற வகையில், கோவை சிங்காநல்லூர் பகுதியில் உள்ள ஓ பை தாமரா உணவகத்தில், குளோபல் கிச்சன், லோக்கல் ஆன்மா என்ற சிந்தனையை முன்நிறுத்தி, புத்தம் புதிய உணவு பட்டியலுடன் கூடிய ரெட்ரோ ஸ்டைலில், ரெட்ரோ பார் துவங்கபட்டுள்ளது..

கடந்த கால நினைவுகளை கொண்டு வரும் நோக்கத்தில், ஹை டைவ் மக்களை ஒருங்கினைக்கும் வபையில் ரம்மியமான இசை, கலாச்சாரம், சமூக உணர்வை வெளிபடுத்தும் ஒரு மறு வடிவமைப்பை இத்தகைய பார் கொண்டுள்ளது.
கூடுதல் சிறப்பம்சங்ளாக, உலகலாவிய சமையல், உள்ளூர் ஆன்மா என்ற நோக்கில், உணவு பட்டியல் இங்கு தயாரிக்க பட்டுள்ளது. மேல்தட்டு, மற்றும் நடுத்தர வர்க்கத்தினரின் வார இறுதி நாட்கள் கொண்டாட ங்களை நடத்த ஏதுவான ஒரு அமைப்பை இத்தகைய ரெட்ரோ பார் கொண்டுள்ளது.

சர்வதேச அளவில் விரும்பி உண்ணும் உணவுகள், தமிழக மக்களுக்கு பரிச்சயமான உணவுகள், இங்கு அனைவராலும் விரும்பும் ஒரு மகத்துவத்தை பெற்றுள்ளது. குறிப்பாக கறிவேப்பிலை பட்டர் கார்லிக் பிரான்ஸ், செட்டிநாடு ஸ்பைஸ்டு லோட்டஸ் ஸ்டெம்ஸ், குறு மிளகு கோழி பீட்சா, மற்றும் ஆச்சி மீன் குழம்பு பவுல், ஆகியவை தனித்துவமிக்க சமையல் கலைஞர்களின் கை வண்ணத்தில் தயாராகி வருகின்றது. இவை உணவுக்காக வாருங்கள், பானங்களுக்காக தங்குங்கள், இவை இரண்டுக்காகவும் மீண்டும் வாருங்கள் என்ற சமையலறை தத்துவத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் இந்த ரெட்ரோ பார் குறித்து ஓ பை தாமரா உணவகத்தின் பொது மேளாளர் உமாபதி அமிர்தம் கூறியதாவது..

விருத்தோம்பல் அனுபவங்கள் பெரும்பாலும் நம் மனதில் நீண்ட கால நினைவுகளை நமக்குள் ஏற்படுத்திவிடும், அத்தகைய விருத்தோம்பலை ஹை டைவ் வழங்குகின்றது. மாறிவரும் லைப் ஸ்டைலுக்கு ஏற்ற வகையில், மாலை பொழுதை மயக்கும் உணவுகள், காக்டெய்ல்கள், இங்கு உங்களை மீண்டும் மீண்டும் வர தூண்டும் என்றார். கூடுதலாக ரெட்ரோ நைட்ஸ் என்ற தொடர் இசை நிகழ்ச்சிகளும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாகவும், இங்கு தேர்ந்தெடுக்கப்பட்ட இசை, பாடல்கள், இசை நிகழ்ச்சிகள் உங்களை மெய் மறக்க செய்யும் நிகழ்வாக அமையும் என்று நம்புவதாக தெரிவித்தார். காலை 11மணி முதல் இரவு 11மணி வரை, செயல்படும் ஹை டைவ் உங்களை அடுத்த கட்ட நிலைக்கு கொண்டு செல்லும் என்பதில் ஐயமில்லை என்றார் என்பது குறிப்பிடத்தக்கது.