• Wed. Apr 24th, 2024

நிவாரண பொருட்களை அனுப்ப தீர்மானம் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி.. இலங்கை தமிழ் தேசிய கூட்டமைப்பு.

ByA.Tamilselvan

May 2, 2022

இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் இன்னல்படும் தமிழர்களுக்கு உதவ அனுமதி தர வேண்டி, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதினார். தற்போது அதற்கான அனுமதி கிடைத்துள்ளது. அனுமதி அளித்த மத்திய அரசுக்கு மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.
இதனிடையே இதுக்குறித்து இலங்கையில் தமிழர்கள் மட்டுமல்லாது அனைத்துத் தரப்பு மக்களுக்கு தமிழக அரசு உதவிட வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் கோரிக்கை வைத்தனர். இலங்கையில் தமிழ் மக்களுக்கு மட்டும் தமிழக அரசு உதவிகளை வழங்கினால் பிளவு ஏற்படும் என்றும் தமிழ்நாடு முதல்வர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேண்டுகோள் விடுத்ததுள்ளது.
தமிழக அரசின் சார்பில் ரூ.80 கோடி மதிப்புள்ள 40 ஆயிரம் டன் அரிசி, ரூ.28 கோடி மதிப்புள்ள 137 வகையான மருந்து பொருட்கள், ரூ.15 கோடி மதிப்பிலான 500 டன் பால் பவுடர் ஆகியவற்றை வழங்க தீர்மானித்துள்ளதாக சட்டப்பேரவையில் முதலமைச்ச்ர் கூறினார். இதுகுறித்து சிலதினங்களில் முடிவு செய்யப்பட்டு நிவாரணப்பொருட்கள் அனுப்பபடும் என முதலமைச்சர் கூறியுள்ளார்
இச்சூழலில், எங்களுக்கு மிகப்பெரிய உதவியாக நிவாரண பொருட்களை இலங்கைக்கு அனுப்புவது என சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியதற்காக எங்களின் உடன்பிறவா சகோதரராகிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம் என்று இலங்கை தமிழ்தேசிய கூட்டமைப்பு சேர்ந்த இலங்கை எம்.பி சுமந்திரன் தெரிவித்துள்ளார். மேலும் இலங்கைக்கு உணவு பொருட்கள், மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை வழங்கி உதவிக்கரம் நீட்டியுள்ள தமிழ்நாடு முதல்வருக்கு நன்றி தெரிவித்துக் கொள்ளுவதாக இலங்கை எம்.பியும் முன்னாள் இலங்கை இராசாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *