• Thu. Mar 19th, 2026
WhatsAppImage2026-03-12at2345221
previous arrow
next arrow
Read Now

பெரியார் திராவிடர் கழகம் கட்சியின் செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்..,

BySeenu

Mar 9, 2026

சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவு அளிப்பது என கோவையில் நடைபெற்ற தந்தை பெரியார் திராவிடர் கழகம் கட்சியின் செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள பெரியார் படிப்பகத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது. அதன் பொதுச்செயலாளர் கு. ராமகிருட்டிணன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த மாவட்ட நிர்வாகிகள், மாநில நிர்வாகிகள் கலந்து கொண்டு கட்சியின் செயல்பாடுகள் குறித்தும் மேம்படுத்துவது குறித்தும் கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர்.

முன்னதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு மறைவிற்கும், கோவையில் முளைச்சாவு அடைந்து உடல் உறுப்பு தானம் செய்த சிறுமி வெண்பாவிற்கும் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியை ஆதரிப்பது, தென் மாவட்டங்களில் சாதி வெறியை தடுப்பதற்கு நடவடிக்கை எடுப்பது, வந்தே மாதரம் பாடலை முழுமையாக பாடுவது என்ற உத்தரவை திரும்ப பெறுவது, தமிழ்நாடு அரசு பள்ளிகளில் சாதி, மதத்தை மையமாக கொண்டு நடைபெறும்.

நிகழ்ச்சிகளுக்கு தடை விதிப்பதை வரவேற்பது, தமிழ்நாட்டின் பாடத்திட்டத்தில் ஆரம்ப பள்ளி முதல் பல்கலைக்கழகம் வரை சமூகநீதி, சமத்துவ வரலாற்றை பாடங்களாக சேர்ப்பது, கோவையில் பெரியார் அறிவுலகம் அமைத்திட்ட முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கும், தமிழ்நாடு அரசுக்கும் நன்றி தெரிவித்தல், சாதி பெயரில் இயங்கும் திருமண தகவல் மையங்களை தடை செய்ய வேண்டும், மே மாதத்தில் தமிழ்நாட்டின் பெரியாரியல் பயிற்சி முகாம் நடத்துவது ஆகிய 9 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.