கரூரில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் இந்து முன்னணியின் செயற்குழு கூட்டம் மாநில தலைவர் காடேஸ்வரா சி. சுப்ரமணியம் தலைமையில் நடைபெற்றது. இந்த செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட திருமணங்கள் குறித்து மாநில தலைவர் காடேஸ்வர சி. சுப்ரமணியம் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது.

இன்று இங்கு நடைபெற்ற மாநில செயற்குழுக் கூட்டத்தில் சில முக்கியமான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது அதில் முதலாவதாக தமிழகத்தில் 2000 கோயில்களில் கும்பாபிஷேகம் நடத்தியதாக இங்கு அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்து வருகிறார். ஏங்களுக்கு கிடைத்த தரவுகளின்படி கோவில்களுக்கு அதிகப்படியான வருவாய் கிடைத்துள்ளது. தமிழக கோயில்களில் வரவு செலவு கணக்கை இந்து அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும்.

முகலாய ஆட்சியில் உண்மை நிலையை பாட புத்தகத்தில் சேர்த்த தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்திற்கு பாராட்டுக்கள் தெரிவித்துக் கொள்கிறோம்.
தமிழகத்தில் சிறு வயது குழந்தை முதல் பாலியல் வன்முறை பெருகி வருவது கவலை இருக்கிறது. அரசு அதனை தடுத்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்படுகிறது. 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக வாக்காளர் பட்டியல் சீரமைத்து போலி வாக்காளர்களை களைய வேண்டும். உள்நோக்கத்துடன் செயல்படும் காவல்துறை அதிகாரி ஏடிஜிபி டேவிட் ஆசீர்வாதத்திற்கு கண்டனம் தெரிவித்து கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது எனக் கூறினார்.







; ?>)
; ?>)
; ?>)