செங்கல்பட்டு மாவட்டம் முடிச்சூர் பகுதி தெற்கு லட்சுமி நகர் குடியிருப்பு பகுதியில், விடியல் தெற்கு லட்சுமி நகர் குடியிருப்போர் பொது நல சங்கம் துவக்கப்பட்டு சங்கத்தின் இரண்டாம் மற்றும் 79வது சுதந்திர தின விழா விடியல் தெற்கு லட்சுமி நகர் சங்கத்தின் சட்ட ஆலோசகர் சீனிவாசன் தலைமையில் நடைபெற்றது.

இதில் சிறப்பு அழைப்பாளராக சிவா விஷ்ணு நகர் குடியிருப்போர் நல சங்கம் தலைவர் பா.தவமணி கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்து இனிப்புகள் வழங்கினார் அதனைத் தொடர்ந்து மாலையில் நடைபெற்ற விடியல் தெற்கு லட்சுமி நகர் குடியிருப்போர் சங்கத்தின் இரண்டாம் ஆண்டு விழா சங்கத்தின் தலைவர் கற்பகம் சீனிவாசன் ஏற்பாட்டில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பள்ளியில் பெற்ற அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ் பரிசு பொருட்கள் இனிப்புகள் வழங்கினார்கள்.

இதில் சிறப்பு அழைப்பாளராக துணைத் தலைவர் முடிச்சூர் விநாயக மூர்த்தி, சிவா விஷ்ணு நகர் குடியிருப்போர் நல சங்கம் தலைவர் பா.தவமணி, மயிலாப்பூர் இசபெல்லா மருத்துவமனை டாக்டர் காந்தையா, உயர் கல்வித் துறை அமைச்சர் உதவியாளர் துரைராஜ், டி.வி.ஆர் வெங்கட்ராமன், பாஸ்கர், குமார், ரமேஷ், ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ் பரிசு பொருட்களை வழங்கினார்கள்.

இந்த நிகழ்ச்சியில் துணைத் தலைவர் பிரியா, செயலாளர் முகமது அம்ரு, துணை செயலாளர் பானுமதி, பொருளாளர் திலகவதி, மகளிர் அணி தலைவர் தமிழ்ச்செல்வி பாலமுருகன், இளைஞர் அணி செயலாளர் கலைச்செல்வன், சங்கம் உறுப்பினர்கள் முகமது அபுபக்கர், முகமது அப்சர், புவனேஸ்வரி அம்மாள், சுமதி, வசந்தா, பாத்திமா, தீலீப், வள்ளி, 12வது வார்டு நிர்வாகிகள் மற்றும் தெற்கு லட்சுமி நகர் சங்கம் நிர்வாகிகள் பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டு விழாவினை சிறப்பித்தனர்
இறுதியில் மதர்ஷா பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு விடியல் தெற்கு லட்சுமி நகர் குடியிருப்பு நல சங்கம் சார்பில் ஒரு மூட்டை அரிசி வழங்கப்பட்டது.