சிவகங்கையில் தமிழ்நாடு வடமாடு நலச்சங்கத்தின் சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தின் வாயிலாக தமிழக அரசுக்கும் விளையாட்டு துறை அமைச்சர் கவனத்தை ஈர்க்க, இந்த மாவட்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தின் வாயிலாக ஆண்டு முழுவதும் வடமாடு மஞ்சுவிரட்டு நடத்த அரசு அனுமதிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்த கூட்டத்தில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றினர்.
சங்கத்தின் கௌரவ தலைவர் சேவியர்தாஸ் செயலாளர் என்.எம். ராஜா ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மாநில கௌரவத் தலைவர் பி கே எம் செல்வம் மற்றும் மாநில தலைவர் அந்தோணி முத்து மாநில செயலாளர் ரெக்கு மோகன், மாநில துணைத்தலைவர் பரத்ராஜ், மாநில பொருளாளர் முத்துப்பாண்டி ஆகியோர் பங்கேற்றார். மற்றும் மாவட்டத் தலைவர் சதீஸ்வரன், கௌரவ ஆலோசகர் தனசேகரன், பொருளாளர் இன் ரஞ்சித்,மாவட்டம் முழுவதும் இருந்து தமிழ்நாடு வடமாடு நலச் சங்கத்தினர் வடமாடு வீரவிளையாட்டு ஆர்வலர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.தற்பொழுது வடமாடு மஞ்சுவிரட்டு நடத்த தமிழக அரசு ஆறு மாத காலம் மற்றும் அனுமதி வழங்கி உள்ள நிலையில் ஆண்டு முழுவதும் வடமாடு மஞ்சுவிரட்டு நடத்த அனுமதி வழங்கி அரசாணை வெளியிட வேண்டும் என்பதை தமிழக முதலமைச்சரும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களையும் வலியுறுத்தி இந்த கூட்டத்தில் ஏக மனதாக தீர்மானம் நிறைவேற்றினர். இதில் ஏராளமானோர் பங்கேற்றனர். மேலும் இந்நிகழ்ச்சியில் பிரபு, மோகன், கவியரசன், பார்த்திபன், மோசஸ், செல்வகணேசன, செல்வம், சௌந்தர பாண்டியன், விஜய் மற்றும் ஸ்ரீதர் ராஜ் முனீஸ்வரன் உள்ளிட்ட ஏராளமானவர் கலந்து கொண்டனர்.
ஆண்டு முழுவதும் வடமாடு மஞ்சுவிரட்டு நடத்த, தமிழக அரசுக்கு கோரிக்கை..,
