விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள தாயில்பட்டி கிராம நிர்வாக அலுவலகம் பின்புறம் உள்ள மின் கம்பத்தில் மின்கம்பி அறுந்து தொங்கிய நிலையில் காணப்படுகிறது.

இதனால் அந்தப் பகுதியில் செல்லும் பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர். பல நாட்களாக இந்நிலை நீடித்தும் மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால், உயிரிழப்பு ஏற்படும் அபாயம் அதிகரித்துள்ளது. உடனடியாக மின்கம்பியை சரிசெய்து பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்




