• Sat. Dec 20th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

மாநாட்டில் பங்கேற்குமாறு கோரிக்கை..,

ByS. SRIDHAR

May 1, 2025

புதுக்கோட்டை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில பொருளாளர் திலகமா அவர்கள், கந்தர்வகோட்டை மற்றும் சுற்றியுள்ள கிராமங்களுக்கு சென்று, மே மாதம் 11ஆம் தேதி மருத்துவர் ராமதாஸ் தலைமையில் மாமல்லபுரத்தில் நடைபெறவிருக்கும் “சமூக நீதி சாதிவாரி கணக்கெடுப்பை வென்றெடுக்க சித்திரை முழு நிலவு வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாடு 2025 ” அழைப்பிதழை வீடு வீடாக சென்று அழைப்பிதழ் வழங்கி மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு கோரிக்கை விடுத்தார்.

தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும் 69% இட ஒதுக்கீடு பாதுகாக்க வேண்டும். உள்ளாட்சி அமைப்புகளில் பிற்படுத்தப்பட்ட மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு வேண்டும். அனைத்து சமூகங்களின் வீழ்ச்சிக்கும் குற்றங்கள் பெருகவும் காரணமாக இருக்கும் மது மற்றும் கஞ்சாவை ஒழித்து போதையில்லா தமிழ்நாட்டை உருவாக்க வேண்டும். பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.

உயர் நீதித்துறையில் மக்கள் தொகை அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கைகளை இந்நிகழ்வின் போது வீடு வீடாக சென்று பொதுமக்களிடம் எடுத்துக்கூறி, இம்மாநாட்டில் கலந்து கொள்வதன் அவசியம் குறித்து விளக்கினார். இந்நிகழ்வில் புதுக்கோட்டை மாவட்ட செயலாளர் பெரியசாமி, மாவட்டத் தலைவர் பிரபு, மாநில செயற்குழு உறுப்பினர் துரையரசன், ஒன்றிய செயலாளர் கிருஷ்ணஜெயசங்கர் மற்றும் நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.

நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தை மூடுவது குறித்தான செய்தியாளர் கேள்விக்கு பதில் அளிக்கையில் “தமிழ்நாட்டில் தேவைக்கு அதிகமாக மின் உற்பத்தி இருப்பதால் தமிழகத்தின் வளத்தை பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கப்பட்டு அண்டை மாநிலங்களுக்கு விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது, இதன் காரணமாகவே N.L.C. மூடவேண்டும் என்ற கொள்கையில் பாட்டாளி மக்கள் கட்சி உறுதியோடு உள்ளது” என்றார்.