விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள ஆலங்குளம் முக்கு ரோட்டில் வைப்பாற்றில் வளர்ந்துள்ள கருவேல மரங்களின் ஆக்கிரமிப்புகளை அகற்றி நீரோட்டம் சீராக இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கேரளா எல்லையில் உள்ள செண்பகவல்லி அணை அருகில் வைப்பாறு இணையும் இடத்தில் அரபிக் கடலில் வீணாக கலக்கும் ஆற்று நீரை வைப்பாற்றில் திருப்பி விட தமிழக அரசு கேரளா அரசு இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

செண்பகவள்ளி வைப்பாறு இணைப்பு திட்டத்தை செயல்படுத்தினால் விருதுநகர் , தூத்துக்குடி, திருநெல்வேலி, ராமநாதபுரம், உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் பெரிதும் பயனடைவார்கள். கிட்டத்தட்ட 40 ஆண்டுகளாக இதனை விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
ஆனால் கிடப்பில் போடப்பட்ட கோரிக்கையாகவே கிடைக்கிறது. ஆகையால் உடனடியாக செண்பகவல்லி அணையினை சீரமைத்து வைப்பாற்றில் தண்ணீர் நிரந்தரமாக செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது.பிரச்சாரத்தில் சுந்தரபாண்டியன் உள்ளிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சிறப்புரை ஆற்றினார்கள்.




