பதினெண் சித்தர் மடம் மற்றும் பீடத்தின் கீழ் இயங்கும் இந்து வேத மறுமலர்ச்சி இயக்கத்தினர் மற்றும் தமிழ் யாகசாலை நிர்வாகிகள் இணைந்து திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் குடமுழுக்கு தமிழில் நடத்த வேண்டும் என்று முருகனிடம் கோரிக்கை வைப்பதற்காக. சரவண பொய்கையில் இருந்து புனித நீர் எடுத்து தமிழில் மந்திரங்கள் முழங்க, கையில் அக்னி சட்டி எடுத்து கோவிலை நோக்கி வந்தனர்.

அப்போது கோவிலுக்கு அருகில் காவல்துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்ப்டது.
அதனைத் தொடர்ந்து பதினென் சித்தர் பீடம் மறவி தலைமையில் சரவண பொய்கையில் இருந்து புனித நீர் கலசங்களில் ஏந்தி திருப்பரங்குன்றம் முருகன் கோயில் வாயிலை வந்தடைந்தனர். கலசங்களில் புனித நீர் தெளித்து 16 கால் மண்டபம் நோக்கி சென்றனர்

பதினெண் சித்தர் மடத்தைச் சேர்ந்த மறவி என்பவர் கூறுகையில் தமிழ் கடவுள் முருகனின் அற்றுபடை வீடுகளில் முதல் படை வீடான திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் குடமுழுக்கு விழா நடைபெறுகிறது இங்கு அர்ச்சவர்கள் வேதபாராயணம் செய்கின்றனர் தமிழ் எங்கும் தமிழ் எதிலும் தமிழ் எனக் கூறும் அரசு.
தமிழ் மொழியில் எங்களுக்கு மந்திரங்கள் கூற வாய்ப்பு அளிக்கவில்லை. ஆகையால் சரவணப் பொய்கையிலிருந்து புனித கலசங்களை ஏந்தி கோயிலை நோக்கி செல்கிறோம் என கூறினார்.
கடிகை செல்வி என்பவர் கூறுகையில் தமிழ் கடவுள் முருகனின் திருக்குட நன்னீராட்டு விழாவில் தமிழில் வழிபாடு செய்ய அனுமதி இல்லை ஆகையால் தமிழில் வேதா பாராயணம் செய்து நாங்கள் திருப்பரங்குன்றம் கோயில் செல்கிறோம் என கூறினார்