மதுரை மாவட்டம் சோழவந்தான் பேருந்து நிலையம் அருகில் புதிய சார் பதிவாளர் அலுவலகத்தை கடந்த ஏழாம் தேதி தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் மதுரையிலிருந்து திறந்து வைத்தார்.


இந்த நிலையில் சார் பதிவாளர் அலுவலகத்தில் இருந்து பேருந்து நிலையத்திற்குள் செல்ல சர்வீஸ் சாலையை சுற்றி செல்ல வேண்டிய நிலை இருப்பதாக பொதுமக்கள் கூறுகின்றனர். மேலும் பேருந்து நிலையத்திலிருந்து சார் பதிவாளர் அலுவலகம் வருபவர்கள் பேருந்து வெளியேறும் பகுதி வழியாக சென்று வரவேண்டிய நிலை இருப்பதாகவும் கூறுகின்றனர். ஆகையால் சார் பதிவாளர் அலுவலகத்தில் இருந்து பேருந்து நிலையத்திற்குள் நேரடியாக செல்ல பாதை அமைத்து தர பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் இந்த பகுதியில் உள்ள சுதந்திரப் போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் மற்றும் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் மூக்கையாதேவர் மாமன்னர் மருது பாண்டியர் ஆகியோர் சிலை அருகில் பாதை அமைத்து தர வேண்டும் எனவும் சிலைகளை பொதுமக்கள் பார்வையில் படும்படி வைக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் சர்வீஸ் சாலையை விரிவுபடுத்தி அனைத்து பேருந்துகளும் பேருந்து நிலையத்திற்குள் வரும் நிலையில் சார்பதிவாளர் அலுவலகத்திற்கு பொதுமக்கள் மற்றும் பத்திரப்பதிவுக்கு வருபவர்கள் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாக நேரிடும் எனவும் பொதுமக்களின் சிரமங்களை குறைக்கும் வகையில் பேருந்து நிலையத்திலிருந்து சார் பதிவாளர் அலுவலகத்திற்கு நேரடியாக பாதை வசதி ஏற்படுத்த வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.




